அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நவம்பர் முதல் தேதி மழை தொடங்கும்

1 Min Read
- Advertisement -

 

சென்னை அக். 29- தாய்லாந்து வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் முதல் சுற்று மழை கடந்த 25-ந்தேதி இரவு வரை பரவலாக பெய்து வந்தது. அதன் பிறகு ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வங்கக்கடலில் உருவான ‘அர்னாப்’ புயல் ஆந்திரா-ஏனாம் கடற்கரைப் பகுதிகளில் நேற்று கரையை கடந்தது. இதன் தொடர்ச்சியாக புயல் கரையை கடந்த சூழலில், கிழக்கு திசை காற்று இன்னும் திரும்பாத நிலையில், தாய்லாந்து வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். இது அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும்.

அதனைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில், இது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார். நவம்பர் 1-ஆம் தேதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைப் பகுதிகளை நோக்கி தாழ்வு மண்டலம் வரக்கூடும்.

இந்த தாழ்வுப் பகுதியாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தின் 2-வது சுற்று மழை 1-ந்தேதி முதல் தொடங்க இருக்கிறது. பெரும்பாலும் வட தமிழகப் பகுதி களில் நல்ல மழையை கொடுக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *