த.வெ.க. ஆட்சியில் வரலாறு காணாத விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக முனைவர் கலையரசன் சட்டவிரோதமாகக் கைது: த.வெ.க. அரசின் உச்சகட்ட பாசிசம்!

3 Min Read
- Advertisement -

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை

சென்னை, அக்.29 த.வெ.க. ஆட்சியில் வரலாறு காணாத விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக முனைவர் கலையரசன் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

த.வெ.க. அரசின் உச்சகட்ட பாசிசம்! வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) உதவிப் பேராசிரியராக உள்ள முனைவர் கலையரசன் அவர்களை நேற்று (28.10.2026) அதிகாலை, சீருடை அணியாத காவலர்கள் சட்டவிரோதமாகக் கைது செய்து, வாடகை வாகனத்தில் ஏற்றிச் சென்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன். கைது செய்யப்பட்டவர் சாதாரண நபரோ, குற்றப் பின்னணி கொண்டவரோ இல்லை.

முனைவர் கலையரசன் அவர்கள் தமிழ்நாட்டின் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர். இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகமான ஜெ.என்.யூ.வில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமான கேம்பிரிட்ஜ் பல்க லைக்கழகம் பதிப்பித்த ‘‘The  Dravidian Model’’ நூலின் ஆசிரியர்களில் ஒருவர். ஒன்றிய அரசின் திட்டக்குழுவில் பொறுப்பு வகித்தவர். தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையைத் தயார் செய்வதில் பங்க ளித்தவர். எல்லாவற்றுக்கும் மேல், தமிழ்நாடு முதலமைச்சர் தலைவராக இருக்கும் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் உறுப்பி னராக இப்போதும் இருப்பவர்.

அப்படிப்பட்டவரைத் தெரியாமல் கைது செய்துவிட்டோம் என்று கூறுவது நம்பும்படி இல்லை. செய்யாத குற்றத்திற்காக, அடிப்படை உரிமைகள் அனைத்தையும் மறுத்து, அவரது கைப்பேசியைப் பறித்து, கைது செய்து அலைக்கழித்ததைச் சாதாரணச் செயலாக எவரும் கடந்துபோக முடியாது. குற்ற வாளிகளை எல்லாம் கூத்தடிக்க விட்டுவிட்டு, கல்வியாளர்களை அச்சுறுத்திப் பார்ப்பது எவ்வளவு பெரிய அசிங்கம்?

முனைவர் கலையரசன் அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்? ‘Dravidian Model’ என்ற பதத்தை முன்வைத்து, திராவிட ஆட்சியால் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியை உலகம் முழுவதும் பறைசாற்றியதற்காகவா? த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகுதான், தமிழ்நாடு இது வரை சந்தித்திராத விலைவாசி உயர்வைச் சந்தித்துள்ளது என்ற உண்மையைச் சொன்ன தற்காகவா?

முட்டாள்களால் நிறைந்த த.வெ.க.வுக்கும், கல்விக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், கல்வியாளர்களைக் கைது செய்து மிரட்டும் அளவுக்கு அறிவின் மீது ஒவ்வாமை கொண்டவர்களாக இவர்கள் நடந்துகொள்வார்கள் என நிச்சயமாக நினைக்க வில்லை. பாசிசத்தில் பா.ஜ.க.வையும் மிஞ்சி விடுவார்கள் என்பதைத்தான் இந்தக் கைது காட்டுகிறது. முதலமைச்சரின் ஒப்புதலோடும் உயரதிகாரிகளின் அனுமதியோடும்தான் இந்த அத்துமீறல் நடக்கிறதா?

முனைவர் கலையரசன் அவர்கள் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. கடந்த ஆட்சிக்காலத்திலும், அவர் சுதந்திரமாகத் தன்னுடைய விமர்சனக் கருத்துகளை முன்வைத்திருக்கிறார். ஆனால், இந்தத் தரங்கெட்ட த.வெ.க. ஆட்சியோ, எங்கள் ஆட்சியைப் பற்றியோ நிர்வாகத் தோல்வி களைப் பற்றியோ ஊடகங்களில் உண்மை யைப் பேசினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மிரட்டும் ரவுடி அரசாகச் செயல்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அரசிற்கு ஆதரவு அளித்துக் கொண்டு இருக்கும் கட்சிகள், இந்த அநியாயத்தைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? இதுதான் இவர்கள் பாசிசத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கும் அரசியலா?

புகழ்பெற்ற பேராசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டைப் புனைந்து, அவரை அலைக் கழித்து, துன்புறுத்திய த.வெ.க. அரசின் பாசிச செயல் கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு காவல்துறையும், அதற்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் அவர்களும் முனைவர் கலை யரசன் அவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்!

– இவ்வாறு அவர் வெளியிட்டு்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *