மத்தியப்பிரதேச பா.ஜ.க.  அரசின் சிறுபான்மையின வெறுப்பின் உச்சம்! தியாகி பர்க்கத்துல்லா பல்கலைக்கழக பெயர் மாற்றம்

1 Min Read

போபால், ஜூன் 6- மத்தியப்பிரதேசத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ‘பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தின்’ பெயரை, அம்மாநில பாரதிய ஜனதா அரசு ‘வாக்தேவி பல்கலைக்கழகம்’ என மாற்றம் செய்துள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த பிரபல சுதந்திரப் போராட்ட தியாகி மவுலானா முகமது பர்கத்துல்லா போபாலி. இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக, போபாலில் 1970-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘போபால் பல்கலைக்கழகம்’, கடந்த 1988-ஆம் ஆண்டு அப்போதைய அரசால் ‘பர்கத்துல்லா பல்கலைக்கழகம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஹிந்துத்துவ அமைப்பினரும் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பும் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இப்பல்கலைக்கழகத்தின் பெயர் ‘வாக்தேவி’ என மாற்றப்பட்டுள்ளது. ‘வாக்தேவி’ என்பது இந்து மதக் கடவுளான சரஸ்வதியைக் குறிக்கும் சொல்லாகும். மேலும், 11-ஆம் நூற்றாண்டில் மத்திய இந்தியாவின் மால்வா பிராந்தியத்தை ஆண்ட இந்து மன்னரான போஜராஜன் (போஜ்பால் என்றும் அழைக்கப்படுபவர்), போபால் நகரத்தை நிறுவினார் என்று கூறப்படுகிறது. எனவே, போபால் நகரின் வரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் நோக்கில் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாடு முழுவதும் பல்வேறு முக்கிய இடங்களின் பெயர்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *