“தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்துக்கு நான் ஆதரவு தெரிவித்தது தவறு” ஜெகன் மோகன் வருத்தம்

1 Min Read
- Advertisement -

அமராவதி, அக். 20– தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான அமைப்பில் ஆளுங்கட்சியின் தலையீடு இருக்கக் கூடாது என்றும், இதற்காக நடுநிலையான தேர்வுக்குழு உருவாக்கப்பட வேண்டும் என்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும், ஆந்திர பிரதேச முன்னாள் முதல மைச்சருமான ஜெகன் மோகன்  வலியுறுத்தியுள்ளார். 2023ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்துக்குத் தனது கட்சி ஆதரவு தெரிவித்ததற்குத் தற்போது வருத்தம் தெரிவித்துள்ள அவர், “ஒரு தேர்வை எழுதும் மாணவரே தனக்கான தேர்வு அதிகாரியை நியமிக் கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

தாடேப்பள்ளியில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தி யாளர்களைச் சந்தித்த ஜெகன் மோகன் , ஆந்திராவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டினார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்வதைத் தடுப்பதற்காக தாக்குதல்கள், பொய் வழக்குகள் மற்றும் காவல்துறையினரின் அதிகாரத்தைத் தவறாகப் பயன் படுத்துதல் ஆகியவற்றுக்காக பயன்படுத்தப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். திருப்பதி, கடப்பா, புலிவெந்துலா மற்றும் புங்கனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கள் கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் பறிக்கப்பட்டதாகவும், காவல்துறையினர் அச்சுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

46 லட்சம் போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ள போதிலும், சீரமைக்கப்படாத பழைய வாக்காளர் பட்டியலைக் கொண்டு அவசர அவசரமாகத் தேர்தலை நடத்த அரசு முனைப்பு காட்டுவதாக ஜெகன் மோகன் ரெட்டி குற்றம் சாட்டினார். இடஒதுக்கீடு விவரங்கள் வெளியான அடுத்த நாளே தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகளுக்குத் தயாராகப் போதிய அவகாசம் கிடைக்கவில்லை என்றும், வார்டுகளின் எல்லை மறுவரையறை ஆளுங்கட்சிக்குச் சாதகமாகச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மாநிலத் தேர்தல் ஆணையரும் ஆளுங்கட்சிக்குச் சாதக மாக செயல்படுவதாக கூறிய அவர், மாநிலத் தேர்தல் ஆணையர்களை நியமிப்பதிலும் முதலமைச்சரின் தலையீடு இல்லாத நடுநிலையான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *