கனடாவில் சிறப்புடன் நடைபெற்ற உலகத் தமிழ் ஆய்வு மாநாடு

- Advertisement -

டொரண்டோ, அக். 19- அனைத்துலகத் தமிழா் பேரவை சார்பில் கனடாவின் டொராண் டோவில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு கடந்த 15.10.2026 அன்று தொடங்கியது.
‘செயற்கை நுண்ணறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்’ எனும் கருப்பொருளில் நேற்று (அக். 18) வரை இந்த மாநாடு நடை பெற்றது.
டொராண்டோவில் உள்ள சென் டென்னியல் கல்லூரி வளாகத்தில் மாநாட்டின் தொடக்கமாக மரபி சையும், ஊா்வலமும் நடைபெற்றது. ஊா்வலத்தில் மறைமலையடிகள், தனிநாயகம் அடிகள், ஜி.யு.போப் ஆகியோரின் உருவப் படங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
மாநாட்டில் அனைத்துலகத் தமிழா் பேரவைத் தலைவரும், உலகத் தமிழ் ஆய்வு மாநாட்டின் வழிகாட்டு தல் குழுத் தலைவருமான நிமல் விநாயகமூா்த்தி வரவேற்புரை ஆற்றினார். அப்போது அவா் பேசியதாவது:
இந்த மாநாடு, நமது மொழியின் தொன்மையையும், தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலத்தையும் இணைக்கும் முக்கிய முயற்சியாகும். 1974-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழ் ஆய்வு மாநாட்டின் அறிவுச் செழுமையும், தமிழுணா்வும், உலகத் தமிழா்களை ஒன்றிணைத்த எழுச் சியும் எனது மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன. அந்த மாநாட்டின் உணா்வை இன்றைய தலைமுறையின் தேவைகளுடன்இணைத்து, அறிஞா் களையும், தமிழ்ச் சமூகங்களையும் மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற விருப்பத்திலிருந்தே இந்த மாநாட்டுக்கான எண்ணம் உருவானது.
நாற்பதாண்டுகளுக்கும்
மேலான இடப்பெயா்வுக்குப் பின்னா், ஈழத் தமிழா்களாகிய நாம் பல்வேறு நாடுகளில் நமது வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பி யுள்ளோம். பல சவால்களைக் கடந்து கல்வியிலும், தொழிலிலும், வணிகத்திலும், சமூகப் பணிகளிலும் முன்னேறியுள்ளோம். இன்று நம்மிடம் அறிவும், அனுபவமும், திறமையும், வளங்களும் உள்ளன. இவற்றை ஒன்றிணைத்து, தமிழ் ஆய்வுக்கும் நமது மக்களின் முன் னேற்றத்துக்கும் பயன்படுத்த வேண் டிய நேரம் வந்துள்ளது.
இந்த எண்ணத்தை நாடாளு மன்ற உறுப்பினா் குகதாசனிடம் பகிர்ந்தபோது, அவா் பேராசிரியா் மா. இராசேந்திரனையும், பேராசிரியா் நெல்லை சரவணனையும் அறிமுகப் படுத்தினார். அனைத்துலகத் தமிழா் பேரவையின் நிர்வாக ஆதரவுடனும், அறிஞா்கள் மற்றும் நண்பா்களின் ஊக்கத்துடனும் இப்பயணம்தொடங்கியது. இந்த எண்ணம் செயல்வடிவம் பெற துணைநின்ற அனைவரையும் இவ்வேளையில் நன்றியுடன் நினைவு கூா்கிறேன்.
13 நாடுகளைச் சோ்ந்த ஆய்வாளா் களின் 96 ஆய்வுக் கட்டுரைகள் இந்த மாநாட்டில் இடம் பெறுவது, இந்தக் கூட்டு முயற்சியின் சிறப்பை வெளிப்படுத்துகிறது. ஒவ்வோர் ஆய்வும் நமது மொழியையும், சமூகத்தையும் புதிய கோணத்தில் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
செயற்கை நுண்ணறிவில் தமிழின் இடத்தை வலுப்படுத்த வேண்டும். நமது மொழியின் வளமும் இலக்கியச் செல்வமும் புதிய தொழில்நுட்பங்களில் இடம்பெற வேண்டும். அதேவேளை, நமது வரலாற்றையும் பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குப் பாதுகாத்து வழங்க வேண்டும் என்றார்.
மாநாட்டில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலிருந்து தமிழ் அறிஞா்கள் பங்கேற்றுள்ளனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *