மனிதநேய மக்கள் கட்சித் தலைவராக ஜவாஹிருல்லா மீண்டும் தேர்வு!

1 Min Read
- Advertisement -

கோவை, அக். 19- தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், கோவை ஈச்சனாரியில் நேற்று (18.10.2026) நடந்தது. கூட்டத்தில் இரு அமைப்புகளின் ஒருங்கிணைந்த மாநிலத் தலைவராக ஜவாஹிருல்லா மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மமக பொதுச் செயலாளராக அப்துல் சமத், பொருளாளராக கோவை உமர், தமுமுக பொதுச் செயலாளராக பேராசிரியர் ஹாஜா கனி, பொருளாளராக பொறியாளர் சபீ உல்லா கான் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் ஜவாஹிருல்லா கூறும்போது, “பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் முஸ்லிம்களுக்கான மூன்றரை சதவீத இடஒதுக்கீடு கிடைக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையைக் கூட்டி, நடவடிக்கை எடுக்க வேண்டும். 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள 18 முஸ்லிம் சிறைவாசிகளுக்கு பரோல் வழங்குவதற்கு பதிலாக, நிரந்தர விடுதலை வழங்க வேண்டும்.

இந்த இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 17ஆம் தேதி தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். இதில், தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்போம்” என்றார்.

ஜவாஹிருல்லாவுக்கு
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

ம.ம.க., த.மு.மு.க. ஒருங்கிணைந்த தலைவராக தேர்ந்தெடுக்க பட்ட ஜவாஹிருல்லாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது சமூக வலைதள பதிவில் கூறியதாவது:

மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஜவாஹிருல்லாவுக்கும், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அப்துல் சமது உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள்!

உரிமைகள் மறுக்கப்படும் இடங்களிலும் – அநீதிக்கு எதிரான போராட்டங்களிலும் உறுதியான குரலாகவும், மதநல்லிணக்கத்தைப் பேணுவதில் இணைப்புப் பாலமாகவும் திகழ்ந்துவரும் இரு அமைப்புகளின் மக்கள் பணி, தங்கள் அனைவரின் தலைமையிலும் வழிகாட்டுதலிலும் மேலும் வலுப்பெற்று, சமூகநீதியும் சமத்துவமும் தழைக்கும் சமுதாயத்தை உருவாக்கத் துணைநிற்கட்டும்! என தனது பதிவில் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *