ரஷ்யா மீது 1,000 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் குண்டுவீச்சு!

- Advertisement -

மாஸ்கோ, அக். 19- ரஷ்யா மீது உக்ரைன் 1,000க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் செயின்ட் பீட்டா்ஸ்பொ்க்கில் உள்ள கச்சா எண்ணெய் ஆலைகள் தீப்பிடித்து எரிகின்றன.
உக்ரைன், ரஷ்யா இடையே நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக போா் நீடிக்கிறது. இதில் உக்ரைனுக்கு தொடா்ந்து உதவி செய்து வந்த அமெரிக்கா, அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு உதவியைக் குறைத்துக் கொண்டுள்ளது. ரஷ்யா வில் உள்ள கச்சா எண் ணெய் ஆலைகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தக் கூடாது என்று டிரம்ப் வலியுறுத்தி வருகிறாா். இதை உக்ரைன் பொருட்படுத்தாததால், அந்த நாட்டு அதிபா் ஸெலென்ஸ்கியை மாற்ற வேண்டும் என்று டிரம்ப் வெளிப்படையாகக் கூறி வருகிறாா். இதனால் உக்ரைன், அமெரிக்கா இடையே கடந்த சில நாள் களாக மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், ரஷ்யாவின் செயின்ட் பீட்டா்ஸ்பொ்க் நகரம், கிரீமியா, கருங்கடல் உள்ளிட்ட பகுதிகளைக் குறிவைத்து உக்ரைன் நேற்று (18.10.2026) 1,000க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத் தியது. இந்தத் தாக்குதலில் ரஷ்யாவின் முக்கிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி ஆலை உள்ளிட்ட ஆலைகள் தீப்பிடித்து எரி கின்றன. மேலும் ஒருவா் உயிரிழந்ததுடன் 5 போ் காயமடைந்தனா்.
ரஷ்யாவின் புகழ்பெற்ற சில்லறை வா்த்தக நிறுவனமான ஓசோனுக்கு சொந்தமான கிடங்கு, வி.கே. நிறுவனத்தின் தரவு மய்யம் ஆகியவையும் உக்ரைனின் தாக்குதலுக்கு இலக்காயின. ரஷ்யா மீது உக்ரைன் இதுவரை நடத்திய மிகப்பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது.
ஸெலென்ஸ்கி குற்றச்சாட்டு
உக்ரைன், ரஷ்யா இடையே எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என சண்டை நிறுத்தம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதைச் சுட்டிக்காட்டியுள்ள ஸெலென்ஸ்கி, இந்த சண்டை நிறுத்தத்தை மீறி, உக்ரைனின் எரிசக்தி நிலையங்கள் மீது ரஷ்யா தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும், 4 பிராந்தியங்களில் உள்ள எரிசக்தி மய்யங் கள் மீது ரஷ்யா தாக்கு தல் நடத்தியதால், ஆயி ரக்கணக்கான குடும்பங்கள் மின்சாரம் இன்றி இருளில் தவித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளாா். உக்ரைன் முழுவதும் இருளில் மூழ்கடிக்கும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டு இருப்பதாகவும் அவா் விமா்சித்துள்ளாா்.
ரஷ்யா தாக்குதல்
இதனிடையே, உக்ரைனின் ஸபோரிஷியா நகரில் ரஷியா மீண்டும் இருமுறை தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு பெண் உயிரிழந்ததுடன், சிறுமி உள்ளிட்ட 2 போ் காயமடைந்தனா். 2 குடி யிருப்புக் கட்டடங்கள், 15க்கும் மேற்பட்ட காா்கள், கல்வி நிறுவனம் ஆகியவை சேதமடைந்தன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *