‘போதையை விடு, விளையாட்டை எடு’ என்று சொன்ன முதலமைச்சரே, முதலில் ஓய்வை விட்டுவிட்டு, உங்கள் துறையைக் கையில் எடுங்கள்!

- Advertisement -

தி.மு.க. தலைவர்
மு.க. ஸ்டாலின்
அறிக்கை

சென்னை, அக்.19  ‘போதையை விடு, விளை யாட்டை எடு’ என்று சொன்ன முதலமைச்சரே, முதலில் ஓய்வை விட்டுவிட்டு, உங்கள் துறையைக் கையில் எடுங்கள் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சில நாள்களுக்கு முன்புதான், திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் ஜாமின் கையெழுத்து போட்டுவிட்டு வந்தவர் மனைவி முன்பே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அப்போதே, ‘‘ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா?’’ என நான் கேள்வி எழுப்பியிருந்தேன். அப்படி உருப்படியான எதுவும் செய்யப்படுவதில்லை எனச் சிவகங்கையில் நேற்று (18.10.2026) நடந்துள்ள மற்றுமொரு கொலை நிகழ்வு காட்டியுள்ளது.

கொலை வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்த மதன் எனும் ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். முழுக்க முழுக்க காவல்துறையின் அலட்சியத்தால் நடந்துள்ள கொலை இது.

பெருந்துறை அருகே செவிலியர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 5 நாள்களுக்குப் பின்புதான் அவரது உடலையே கண்டறிந்திருக்கிறார்கள். நடப்பது நம் ஆட்சிதானே என நினைத்து த.வெ.க. நிர்வாகிகளின் போதைப் பொருள் கடத்தலும் கொடிகட்டிப் பறக்கிறது.

வேதாரண்யத்தில் த.வெ.க. ஒன்றியச் செயலாளர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இப்போது, அதே மாவட்டத்தில் உலகத்துக்கே மெத் தயாரித்து விற்பனை செய்யும் மய்யமாகத் தமிழ்நாட்டை மாற்ற முயன்ற த.வெ.க. நிர்வாகி ‘மெத்’ பூபாலனும் கைதாகியுள்ளார்.

முதலமைச்சரின் திரைப்படங்களைப் பார்த்து இதைத்தான் அவரது கட்சிக்காரர்கள் கற்றுக்கொள்கிறார்களா? மாநிலக் காவல் துறையினரால் இவர்களைப் பிடிக்க முடிய வில்லையா அல்லது ஆளும்கட்சி நபர் என்பதால் இத்தனை நாள் கண்டும் காணாமல் விட்டனரா?

போதைப்பொருள் கட்டுப்பாடு செய்யவேண்டுமென்றால், முதலில் தன் கட்சியினரை முதலமைச்சர் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். அதற்கு, காவல்துறை முதலில் அவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால், நடப்பது என்ன?

துறைக்குப் பெயரளவில் மட்டுமே முதல மைச்சர் பொறுப்பு வகிக்கிறார். தன்னிடமுள்ள  பல துறைகளின் பொறுப்புகளை மற்ற அமைச்சர்களுக்குப் பிரித்துக் கொடுத்ததைப் போல, காவல்துறையையும் ‘அவுட்சோர்ஸ்’ செய்து விட்டாரா?

காவல்துறையில் அவர் உரிய கவனம் செலுத்துவதில்லை என்பதைத்தான் நிற்கா மல் தொடரும் அரிவாள் வெட்டுகளும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளிடம் பிடிபடும் போதைக் கடத்தல்களும் காண்பிக்கின்றன.

முதலமைச்சர் அவர்களே, உங்கள் அலட்சி யத்தால் உயிர்கள் பலியாகின்றன. ‘போதையை விடு, விளையாட்டை எடு’ என்று சொன்ன நீங்கள், முதலில் ஓய்வை விட்டுவிட்டு, உங்கள் துறையைக் கையில் எடுங்கள்.

– இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டா லின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *