நியாய விலைக்கடை இலவச அரிசி தரத்தில் சன்னரக அரிசி ரூ.30க்கு விற்பனை! திருப்பிக் கொடுத்த மக்கள்

1 Min Read
- Advertisement -

சேலம், அக்.20– சேலத்தில் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சன்னரக அரிசி, நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியைப் போல் இருப்பதாகக் கூறி பொதுமக்கள் திருப்பிக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் சாப்பாட்டு அரிசி விலை கிலோ 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை உயர்ந்துள்ள நிலையில், கூட்டுறவு மற்றும் அமுதம் அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பொன்னி கூட்டுறவு அங்காடியில், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மற்றும் சேலம் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சிவக்குமார் ஆகியோர் விற்பனையைத் தொடங்கி வைத்தனர்.

ஆனால், அரிசியை வாங்கிய பொதுமக்கள், அது நியாய விலைக் கடை அரிசியைப் போல் இருப்பதாகக் கூறி பணத்தைத் திருப்பித் தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நியாய விலைக் கடை களில் அரிசி இலவசமாக கிடைக்கும் போது அதே அரிசியை சன்னரக அரிசி என்று 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அதை வாங்கி என்ன செய்வது என்று கேள்வி எழுப்பி மக்கள் அரிசியை திருப்பி கொடுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், ஒருவருக்கு 5 கிலோ மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில தவெக நிர்வாகிகள் 10 கிலோ வரை வாங்கிச்சென்ற நிகழ்வும் அரங் கேறியது. வாடிக்கையாளர்களின் புகார் குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் சரியான விளக்கம் அளிக்கவில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *