அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே, ஜுடோ தற்காப்பு பயிற்சிகள் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஜூலை 3  தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண் டில் அரசு நடுநிலை பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கும், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கும் 3 மாதங்கள் கராத்தே, ஜூடோ, டேக்வேண்டோ, சிலம்பம் போன்ற தற்காப்பு கலை பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை அளிப்பதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் 3 மாதங்களுக்கு தலா ரூ.12 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சியை நடத்த தேவையான வழிகாட்டு நெறி முறைகள் பள்ளி கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

* ஒரு பள்ளியில் அதிகபட்சம் 100 மாணவிகளுக்கு மிகாமலும், 10 மாணவிகளுக்கு குறையாமலும் தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்பட வேண்டும். இதில் மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி, தியானம் ஆகியவை இடம்பெறுவது அவசியம்.

* மொத்தம் 24 பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் நிலையில் அதை மாதத்துக்கு 8 ஆக பிரித்து நடத்த வேண்டும்.

* தற்காப்பு கலை பயிற்றுநருக் கான மாத ஊதியம் ரூ.4 ஆயிரம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிற்றுநர் மீது குற்றமின்மை அறிக்கை காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்டிருக்க வேண்டும்.

* வரும் ஆகஸ்ட் முதல் வாரத் தில் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட வேண்டும். தொடர்ந்து, நவம்பருக்குள் பயிற்சி வகுப்புகளை நடத்தி முடிக்க வேண்டும்.

* மாணவிகளுக்கு ஒவ்வொரு பாடவேளையும் ஒன்றரை மணி நேரம் வீதம் வாரத்துக்கு இரு நாள்கள் பயிற்சி வகுப்புகள் நடை பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

* பயிற்சி பெற விருப்பம் இல்லாத மாணவிகளை கட்டாயப் படுத்த கூடாது.

* மாணவிகளிடம் பயிற்சி யாளர்கள் கவனமாகவும், கனிவுடனும் பேச வேண்டும்.

* பள்ளியில் உள்ள பெண் ஆசிரியர்களின் மேற்பார்வையில் தான் கண்டிப்பாக இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

* பயிற்சியில் மாணவிகள் பங்கேற்க பெற்றோரின் ஒப்புதல் அவசியம்.

* உடல் நலம் பாதிக்கப்பட்ட வர்கள் பயிற்சியிலிருந்து விலக்கு பெறலாம்.

* விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளுக்கு பயிற்சியில் முன்னுரிமை அளிப்பது அவசியம்.

* தற்காப்பு கலை பயிற்சிகான உபகரணங்களை பள்ளி மேலாண்மைக் குழு, முன்னாள் மாணவர்களின் பங்களிப்புடன் வாங்கலாம். இவ்வாறு அதில் குறிப் பிடப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *