சவுதியில் இலங்கைத் தமிழர் அனோஜனிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து!

- Advertisement -

சவுதி, அக்.15- சவுதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கையின் வெளியுறத்துறை துணை அமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார்.

இலங்கை கிழக்கு மாகாணத்தின் கல்முனை பகுதியைச் சேர்ந்தவர் அனோஜன சிவராசா. இவர் வேலைக்காக 2025 செப். 4-ஆம் தேதி சவுதி அரேபியாவுக்குச் சென்றார்.

கடந்த ஜூலை 27-ஆம் தேதி, முகநூலில் அனோஜன் நபிகள் நாயகம் குறித்து தவறாகப் பதிவிட்டதாகவும், இது மத மாற்றம் என்றும் குற்றம்சாட்டி இவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் அல்-அஹ்சா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அனோஜனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 30 லட்சம் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது. 27 வயதான அனோஜனுக்கு கடந்த செப்டம்பர் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அனோஜனுக்கு ஆதரவாக பலரும் சமூகவலைதளங்களில் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மானுடன் பிரதமர் மோடி நல்ல உறவுகளை வைத்துள்ளதால், அவருக்கு ஆதரவாக பேச வேண்டும் என்று இலங்கையைச் சேர்ந்த எம்பி மனோ கணேசனும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில், இலங்கை சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழுவினர் கடந்த வாரம் சவுதி அரேபியாவுக்குச் சென்றிருந்த நிலையில், அங்குள்ள சட்ட வல்லுநர்களுடன் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.

மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், நேற்று (14.10.2026) அனோஜனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை இலங்கையின் வெளியுறத்துறை துணை அமைச்சர் அருண் ஹேமசந்திரா உறுதிப்படுத்தியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *