
திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் ‘பெரியார் உலக’த்தில் தந்தை பெரியார் சிலை அமைக்கும் இடத்தில், இரண்டாவது தளம் (mezzanine) அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 60 அடி கட்டடத்தில் 40 அடியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இன்று (14.10.2026) திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் தலைமையில், 26 ஆவது மாதாந்திர முன்னேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இவ்வாய்வுக் கூட்டத்தில், சென்னை மற்றும் பல பகுதிகளிலிருந்து மூத்த பொறியாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பங்கேற்றனர். இதுவரை 3 லட்சத்து 72 மணிநேரம் பணிகள் பாதுகாப்பாக நடைபெற்று இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
