ஒற்றைப்பத்தி

1 Min Read
- Advertisement -

அய்.அய்.டி.யா – கொக்கா?

சென்னை
அய்.அய்.டி.யில் நடைபெற்ற நிகழ்வில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யும் கலந்துகொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் ‘வந்தே மாதரம்’ பாடல் பாடப்படவில்லை.

பிரதமரும், முதலமைச்சரும் கலந்துகொண்ட ஓர் அரசு நிகழ்ச்சியில் ‘வந்தே மாதரம்’ ஏன்பாடப்படவில்லை என்று எந்தப் பத்திரிகையும் கண்டிக்கவில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால், ‘வந்தே மாதரம்’ பாடல் பாடப்படவேண்டும் என்று ஒன்றிய பி.ஜேபி. அரசு தனி சட்டமே இயற்றியுள்ளது. (தேசிய அவமதிப்புச் சட்டம் (1971 – Prevention of Insults to National Honour Act -1971).

இதன்மூலம், இதற்கு முன் தேசிய கீதத்திற்கு (ஜனகணமன) வழங்கப்பட்டிருந்த சட்டப் பூர்வமான பாதுகாப்பு – ‘வந்தே மாதரமும்’ பாடலுக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

இப்படிச் சட்டம் இருந்தும், ஒன்றிய அரசு நிறுவனமான அய்.அய்.டி.யில், பிரதமரும், முதலமைச்சரும் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், ‘வந்தே மாதரம்’ பாடல் தவிர்க்கப்பட்டது ஏன்? இதுகுறித்து குறிப்பாக பா.ஜ.க. மற்றும் ஊடகத்தினர் ஊளையிடாதது, ஏன்? ஏன்?

சென்னை
அய்.அய்.டி. தனி ராஜ்ஜியம் நடத்துகிறது – தான் என்ற அகங்காரம் பூணூல் கொடியாகப் பறக்கிறது.

இதே சென்னை அய்.அய்.டி.யில் 25.2.2018 அன்று ஒரு விழா நடைபெற்றது.

அவ்விழாவில், ஒன்றிய அமைச்சர்கள் நிதின்கட்காரி, பொன்.இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அந்த விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படாததோடு மட்டுமல்லாது, அதற்குப் பதில் சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டது என்பதை இந்த நேரத்தில் எடுத்துக்காட்டுவது மிகவும் பொருத்தமாகும்.

‘‘சூத்திரனுக்கொரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு (பார்ப்பானுக்கு) ஒரு நீதி’’ என்று பார்ப்பனப் பாரதியே பாடிய பிறகு, நாம் என்ன சொல்ல!

– மயிலாடன்

குறிப்பு: இதைச் சொல்வதால் ‘வந்தே மாதரம்’ பாடலை நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்று பொருளல்ல!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *