பள்ளிகளில் மூன்று நாள் உடற்கல்வி வகுப்பு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

- Advertisement -

சென்னை, அக்.14- ‘பள்ளிகளில் இனி வாரத்தில் 3 நாட்கள் உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம்’ என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம்அமைச்சர் தலைமையில் சென்னையில் நேற்று (13.10.2026) நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, இயக்குநர் (பொறுப்பு) ந.லதா, தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ், அரசுத்தேர்வுகள் இயக்குநர் சுகன்யா மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.இதில், பள்ளி மாணவர்களுக்கான திருத்தப்பட்ட புதிய கால அட்டவணையை அமைச்சர் வெளியிட்டு அமைச்சர் கூறியதாவது:

பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி மற்றும் கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை வாரத்தில் 3 நாட்கள் உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்படும். 2 நாட்கள் கல்வி இணை செயல்பாடு வகுப்புகள் நடத்தப்படும்.

அதேபோல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் உடற்கல்வி வகுப்புகளும், 2 நாட்கள் கல்வி இணை செயல்பாடு வகுப்புகளும் நடத்தப்படும். ஆசிரியர்கள் தேவைப்பட்டால் கல்வி இணை செயல்பாடு வகுப்புகளை உடற்கல்வி வகுப்புக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். உடற்கல்வி வகுப்புகளைக் கட்டாயமாக ஒதுக்க வேண்டும்.

ஜாதி, மதம், நிறம், விளையாட்டு திறன், உயரம், குள்ளம் என எதற்காகவும், எந்தக் குழந்தையையும் விளையாட்டில் இருந்து ஒதுக்கி வைக்கக்கூடாது. மாணவர்கள் உடற்கல்வி வகுப்புக்குச் செல்ல ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். மைதானங்கள் இல்லாத பள்ளிகளுக்கு அதற்கான வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

அரசுப் பள்ளிகளில் 6,000 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. அதில் 2,000 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இந்த காலிப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவாக நிரப்பப்படும். இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *