மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி முதலிடம் பெற்று அசத்தல்!

1 Min Read
- Advertisement -

திருச்சி, அக்.15– தந்தை பெரியார் அவர்களின் 148ஆம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திருச்சி மாநகர, மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி அன்று திருச்சி, இரயில் நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டல், ‘மாக்சி ஹால்’ அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இப்பேச்சுப் போட்டியில் திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி மு.சுரேகா மிகுந்த ஆர்வமுடன் கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார்.

மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்ட இப்போட்டியில், சிறப்பான கருத்துகளை முன்வைத்து உரையாற்றிய   மாணவி மு. சுரேகா முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.

வெற்றி பெற்ற மாணவிக்கு ரூ.2000 ரொக்கப் பரிசும், புத்தகப் பரிசும் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவி மு. சுரேகாவிற்குப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் நிர்வாகத்தினர் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அன்போடு தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *