திருச்சி, ஆக. 28- திருச்சி – பெரியார் மருந்தியல் கல்லூரி Emmchak Formulations Pvt. Ltd., கே.எஸ். வாரியார்ஸ் அஷ்டங்கா ஆயுர்வேதா (Ashtanga Ayurvedics (P) Ltd.), புதுச்சேரி அருணா குருதிப் பரிசோதனை நிலையம் மற்றும் எக்ஸ்ரேஸ் (Aruna Clinical Laboratory & X-Rays), சித்தா வனம் (Siddha Forest), ஜமால் முகமது கல்லூரி, நாகமங்கலம் ஹர்ஷமித்ரா புற்றுநோய் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை, ஜிஆர்டி மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற 7 நிறுவனங்களுடன் இம்மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கான இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தா மரை மற்றும் 7 நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் மேற் கொண்ட இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கான கல்வி. தொழிற்சாலை, மருத்துவ மனைகளில் நேரடி செயல்முறை பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான செயல்பாடுகளை பரிமாறிக் கொள்ளும் மிகப் பெரிய வாய்ப்பாக மேற்கொள் ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் மருந்து தயாரிப்புக்கள், தர மேலாண்மை, விற்பனை மற்றும் ஆராய்ச்சி கண்டுபிடிப்புக்கள் சார்ந்த மருந்தியல் அறிவை மாணவர்கள் பெறுவதோடு, தொழில் பயிற்சிக் கும் வேலைவாய்ப்புக்கும் இவ் வொப்பந்தம் வழிவகுக்கும். இக்கல்லூரி முன்னதாக காவேரி மருத்துவமனை (Kauvery Multi-Speciality Hospital), திருச்சி மற்றும் Scinicom Labs Pvt. I.td., கன்னியாகுமரி ஆகிய இருபெரும் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
