திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு முப்பெரும் விருதுகள்

1 Min Read
- Advertisement -

திருச்சி, அக்.15- கன்னியாகுமரி சினிக்கார்ன் லேப்ஸ் பிரைவேட் லிமிடெட்.(Scinicorn Labs Pvt. Ltd.) தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை சாதனை யாளர்களாக உருவாக்கி வரும் பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு முப்பெரும் விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளது.

சினிக்கார்ன் லேப்ஸ் பிரை வேட் லிமிடெட். தொழில்நுட்ப நிறுவனமும் உதயா பொறியியல் கல்லூரியும் இணைந்து 2026ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழாவினை மார்த் தாண்டத்தில் 10.10.2026 அன்று நடத்தியது.

இதில் 45 ஆண்டு களுக்கும் மேலாக கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு “சிறந்த நிறுவனத்திற்கான விருதினை” (Best Institution Award) சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் ஜெ.பிரகாஷ் மாறன் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.செந்தாமரைக்கு வழங்கி சிறப்பித்தார்.

பெரியார் கல்வி நிறுவனங்கள்

மேலும் “சிறந்த கல்வி மற்றும் மேம்பாட்டிற்கான விருதினை” (Academic Excellence and Development Award) மருத்துவ ஆய்வுக் கூட தொழில்நுட்பநர் துறை முதன்மையர் பேராசிரியர் சு.உமாதேவிக்கும் “மாணவ முன்னேற்றத்திற்கான பேராசிரியர் பங்களிப்பு விருதினை” (Faculty Contribution to Student Success Award) இளநிலை மருந்தியல் துறையின் முதன்மையர் முனைவர் சு.கற்பகம் குமர சுந்தரிக்கும் வழங்கி சிறப்பித்துள்ளது.

முன்னதாக சுற்றுச்சூழல் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்து வதில் தொழில் நுட்பத்தை தக்க வைத்தல் என்ற தலைப்பில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் மூலிகை மருந்தியல் துறை பேராசிரியர் முனைவர் விஜயலெட்சுமி மற்றும் முதுநிலை மருந்தியல் மாணவர்கள் 7 பேர் பங்கு கொண்டனர். அதில் மாணவர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்ததில் முதுநிலை மருந்தியல் மாணவர் ஏ.ஜீவகுமார் “சிறந்த ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தலுக்கான விருதினையும்” பாராட்டுச் சான்றிதழினையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *