சென்னை, அக். 15 தமிழ்நாட்டில் போதுமான சொந்த உற்பத்தித் திறன் மற்றும் நீண்டகால ஒப்பந்தங்கள் இருந்தும், வெளிச் சந்தையில் ஒரு யூனிட் ரூ.35 வரை விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவது குறித்து மின்துறை அமைச்சர் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பு தலைவர் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். அதிகரிக்கும் கொள்முதல் செலவு: கடந்த மே மற்றும் ஜூன் மாதங் களில் ஏற்பட்ட 21,000 மெகாவாட் மின் தேவையை, தமிழ்நாட்டில் சொந்த உற்பத்தி மற்றும் ஏற்கெனவே உள்ள ஒப்பந்தங்கள் மூலம் வெற்றி கரமாகச் சமாளித் தோம். ஆனால், தற்போது ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35 வரை கொள்முதல் செய்யப் படுவதாகவும், இதற்காக நாளொன்றுக்கு சுமார் ரூ.77 கோடி செல விடப்படுவதாகவும் கூறப் படுகிறது.
பயன்படுத்தப்படாத உற்பத்தித் திறன்: தமிழ்நாடு அனல் மின்நிலையங்களின் மொத்த உற்பத்தித் திறன் 5,780 மெகாவாட் ஆகும். இதில் பழுதுபார்ப்பு காரணமாக 420 மெகாவாட் மட்டுமே நிறுத்தப் பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 5,360 மெகாவாட் உற்பத்தித் திறன் உள்ளது. ஆனால், தற்போது 3,000 மெகாவாட் டைத் தாண்டி உற்பத்தி செய்யப்படாதது ஏன்?
அனல் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு தோராயமாக ரூ.5.50 செலவிலேயே உற்பத்தி செய்ய முடியும். அவ்வாறிருக்கையில், யூனிட் ஒன்றுக்கு ரூ.35 கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? நீண்ட கால ஒப்பந்தங்கள் மற்றும் மத்திய தொகுப்பு மூலம் குறைந்த விலைக்கு மின்சாரம் பெறும் வாய்ப் புகள் இருந்தும், அவற்றை ஏன் முழுமையாகப் பயன்படுத்தவில்லை?
மின்வெட்டு குறித்த சந்தேகம்: போதிய உற்பத்தித் திறன் இருந்தும் மின்தடை ஏற்படுவதும், அதிக விலைக்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதும் பொதுமக்களிடையே பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது. மின்சாரக் கொள்முதலை நியாயப் படுத்துவ தற்காகவே வேண்டுமென்றே மின் வெட்டு உருவாக்கப்படு கிறதா?
உற்பத்தி குறைக்கப் படுவதற்கான உண்மை யான காரணங்கள் மற்றும் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதன் பின்னணி குறித்து தமிழ்நாடு மின்துறை அமைச்சர் அவர்கள் முறையான விளக்கத்தை உடனடியாக அளிக்க வேண்டும் என தமிழ் நாடு மின்துறை பொறி யாளர் அமைப்பு வலி யுறுத்தியுள்ளது.
