ஓபிசி ஊழியர்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் முறையான குறைதீர் அமைப்பை உருவாக்க வேண்டும்

2 Min Read
- Advertisement -

புதுடில்லியில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவரிடம்
அகில இந்திய யூனியன் வங்கி ஓபிசி நல சங்க நிர்வாகிகள் மனு அளிப்பு

புதுடில்லி, அக்.14 தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் (NCBC) அழைப்பின் பேரில், அகில இந்திய யூனியன் வங்கி ஓபிசி பணியாளர்கள் நல சங்கத்தின் (AIUBOBCEWA) நிர்வாகிகள் புதுடில்லிக்குச் சென்று, தங்களது குறைகள் தொடர்பான மனுக்களை 13.10.2026 அன்று, நேரில் சமர்ப்பித்தனர்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் சாத்வி நிரஞ்சன் ஜோதியிடம்  அகில இந்திய ஓபிசி சங்கத்தின் பிரதிநிதிகள் குழு பின்வரும் முக்கிய கோரிக்கைகளை ஆதாரங்களுடன் முன்வைத்தது.

காலாண்டு கூட்டங்களை மீண்டும் நடத்த வேண்டும்!

பிராந்திய அலுவலக (RO) அளவில் ஓபிசி பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்டு வந்த காலாண்டு கூட்டங்களை மீண்டும் நடைமுறைப் படுத்த வேண்டும்.

சங்க நிர்வாகிகளுக்கு பணியிட மாறுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்!

சங்க நிர்வாகிகளுக்கு பணியிட மாறுதலில் இருந்து உரிய பாதுகாப்பு வழங்குவதுடன், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜிதேந்திர ஜெய்ஸ்வால் ஒடிசாவைச் சேர்ந்த பிக்ரம் கேசரி மந்த்ரி ஆகியோரை அவரவர் மாநிலங்களுக்கு மீண்டும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.

குறைதீர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும்!

தலைமை அலுவலகத்தில் (HO) ஓபிசி ஊழியர்களின் குறைகளை விரைவாகவும் பயனுள்ளதாகவும் தீர்க்கும் முறையான குறைதீர் அமைப்பை உருவாக்க வேண்டும்.

இக்கோரிக்கைகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் உரிய ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்ட வாதங்களை  ஆணையத் தலைவர் பொறுமையுடன் கேட்டறிந்தார்.

யூனியன் வங்கி நிர்வாகத்தின் சார்பில், பிஜு வாசுதேவன், தலைமை பொது மேலாளர் (HR); ரஞ்சித் குமார், மத்திய அலுவலகத் தின் ஓபிசி தலைமைத் தொடர்பு அதிகாரி; நிதின்குமார், AGM (ER) ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

சங்கத்தின் சார்பில் அகில இந்திய ஓபிசி சங்கத்தின் தலைவர் கோ. கருணாநிதி ஒருங்கிணைப்பில், டாக்டர் அமிர்தான்ஷு, எஸ். நட ராஜன், கோபிசந்த், எம். செந்தமிழ்ச் செல்வன், பி. லோகேஷ் பிரபு, வம்சி கிருஷ்ண கோபால், யோகேஷ் பாட்டீல், திலீப் குமார் கனோஜியா, வி.வி.வி.எஸ். பிரசாத் மற்றும் ஷிவால் பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *