ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சிகள் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, ஆக.28 ஜம்மு – காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கான 9 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இதையடுத்து 32 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை தேசிய மாநாட்டுக் கட்சி நேற்று (27.8.2024) வெளியிட்டது. இதனிடையே 29 பேர் கொண்ட 3-வது பட்டியலை வெளியிட்டது பாஜக.
ஜம்மு – காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. வரும் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. அக்.4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இதில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு நிறைவுபெற்றது. இதன்படி காங்கிரஸ் 32 இடங்களிலும், தேசிய மாநாட்டுக் கட்சி 51 இடங்களிலும் போட்டியிட இருப்பதாக அறிவித்து உள்ளன.

இந்தியா கூட்டணியைச் சேர்ந்த பிற கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜம்மு – காஷ்மீர் தேசிய பாந்தர்ஸ் கட்சி தலா 1 இடத்தில் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இதில் 9 பேர் இடம்பெற்றுள்ளனர். த்ரால் தொகுதியில் சுரேந்தர் சிங் சன்னி, தேவ்சர் தொகுதியில் அமனுல்லா மான்ட்டூ உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் போட்டியிடுகின்றனர்.

இதேபோன்று தேசிய மாநாட்டுக் கட்சி சார்பில் போட்டியிடும் முதல் கட்ட 32 வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. கந்தர்பால் தொகுதியில் மேனாள் முதலமைச்சரும் கட்சியின் துணைத் தலைவரு மான உமர் அப்துல்லாவும், ஜாடிபால் தொகுதியில் கட்சியின் மூத்த தலைவர் தன்வீர் சாதிக்கும் போட்டியிடுகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *