ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி ஜூன் 30 முதல் நாடு தழுவிய போராட்டம் -காங்கிரஸ் அறிவிப்பு

1 Min Read

அகமதாபாத், ஜூன் 27- இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் மறுதேர்வு நடத்தப்பட்டது.

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சதேஜ் பாட்டீல், அகமதாபாத்தில் 25.6.2026 அன்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது: “நீட் நுழைவுத் தேர்வை ஆண்டுதோறும் சுமார் 23 லட்சம் பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வில் பல்வேறு மோசடிகள் நடை பெறுகின்றன.

நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை (என்டிஏ) குறித்து உயர்நிலை விசாரணை நடத்தப் பட வேண்டும். வினாத்தாள் மோசடி யில் தொடர்புடைய என்டிஏ அதிகாரிகளை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும். நீட் வினாத்தாள் கசிவு, முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.

இதை வலியுறுத்தி ஜூன் 30ஆம் தேதி முதல் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும். மாணவர்களின் குரல் என்ற பெயரில் 28 முக்கிய நகரங்களில் 40 நாட்கள் தொடர் போராட்டங்கள் நடைபெறும். இறுதிக் கட்டமாக “டில்லி சலோ” போராட்டம் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *