குழந்தைத் திருமணங்களும் இந்தியாவும்

3 Min Read
- Advertisement -

பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாளானஅக்டோபர் 11 அன்று உலகெங்கும்ஒருங்கிணைக்கும் அய்க்கிய நாடுகள் அவை, இந்த ஆண்டுக்கு வைத்திருக்கும்கருத்து – ‘குழந்தை மணங்களைத் தடுப்போம்!” என்பதாகும். கேட்பதற்கு நமக்குவியப்பாக இருக்கலாம். இன்னுமா இவ்வுலகில் குழந்தை மணங்கள் நடக்கின்றன என்று!

ஒவ்வோர் ஆண்டும், 1 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான சிறுமிகளுக்கு (அதாவது ஏறக்குறைய ஒவ்வொரு மூன்று வினாடிகளுக்கும் ஒரு சிறுமிக்கு) உரியவயதுக்கு வருவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இதில் 31சதவீதம் துணை-சகாரா ஆப்பிரிக்கா என்றழைக்கப்படும், சகாரா பாலைவனப்பகுதிகள் நிறைந்திருக்கும் பெரும்பகுதி ஆப்பிரிக்காவில் நிகழ்கிறது.

சிறுமிகளின் உரிமைகளை மறுக்கும் மிக முக்கியமான கொடுமையாக குழந்தைத்திருமணம் என்னும் அவலம் இன்னும் நீடிக்கிறது. பல லட்சக்கணக்கானசிறுமிகளுக்குப் பள்ளியில் தொடர்ந்து படிக்கவும், தங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், வன்முறையிலிருந்து விடுபட்டு வாழவும், தங்கள் திறன்களை வெளிப்படுத்தவுமான வாய்ப்பு இதனால் மறுக்கப்படுகிறது. உலகளவில் 15 முதல்19 வயதுக்குட்பட்ட இளம் பெண்களிடையே தற்கொலை முயற்சி மரணத்திற்கானமுக்கிய காரணங்களில் ஒன்றாகவும் இக் குழந்தைத் திருமணக் கொடுமைகள் இருக்கின்றன. இது ஏதோ ஆப்பிரிக்காவில் மட்டும் நடக்கிறது என்று கருதக் கூடாது.

உலக எண்ணிக்கையில் ஏறத்தாழ 10 சதவிகிதம் இந்தியாவில் நிகழ்கிறது. ஒவ்வோர்ஆண்டும் சுமார் 15 லட்சம் பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடத்தப்படுகிறது.15 முதல் 19 வயது இந்திய இளம் பெண்களில் 16 சதவிகிதம் திருமணம் செய்தவர்களாக இருக்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். 2005-2006 ஆம்ஆண்டுகளிலிருந்து வெகுவாக இந்த எண்ணிக்கை குறைந்துவருகிறது என்றாலும்,இத்தனை லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் வீணடிக்கப்படுவதை நாம் எளிதில்கடந்துவிட முடியுமா?

கல்வி அறிவற்றவர்கள், சில பழங்குடியினத்தவர், ஏழை, எளிய மக்களிடம்மட்டுமல்ல… உயர்ஜாதியினர் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள்மத்தியிலும் இந்தப் பழக்கம் தொடர்கிறது. ஸநாதனத்தை முழுமையாகக் கடைப்பிடிக்கிறோம் என்ற பெயரில் இன்னும் பின்பற்றத் துடிக்கின்றனர், பரிந்துரைக்கின்றனர். பருவம் எய்துவதற்கு முன்பே பெண்களுக்குத் திருமணம் செய்துவைத்துவிட வேண்டும். இல்லையெனில், அவளுடைய தகப்பனுக்கு அருவெறுக்கத்தக்க தண்டனை உண்டு சொன்னது ஸநாதனம் தானே!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் இப்படியொரு நிகழ்வு நடைபெற்றது. 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும்அக்டோபர் மாதங்களில், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளுக்குத் திருமணம் செய்துவைக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாகக் கடலூர் மாவட்டக் காவல்துறை, சமூக நலத் துறை மூலம் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிலதீட்சிதர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், அப்போது ஆளுநராக இருந்தஆர்.என்.ரவி என்ன பேசினார்?

சிதம்பரம் தீட்சிதர்களுக்கு எதிரானநடவடிக்கை குறித்துப் பேட்டியளித்த அப்போதைய தமிழ்நாட்டு ஆளுநரும், தீவிரஆர்.எஸ்.எஸ்.காரருமான ஆர்.என். ரவி, “சிதம்பரம் கோயிலை அபகரிக்கத்தமிழ்நாடு அரசு செய்த சூழ்ச்சி இது“ என்றும், “தீட்சிதர்களைக் குறிவைத்துஇந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது“ என்றும் அபாண்டமாகக் குற்றம்சாட்டியதுடன், பிரச்சினையைத் திசை திருப்பும் வகையில், ஆறு, ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளுக்கு உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட’இரண்டு விரல் சோதனை’ (Two-finger test) நடத்தப்பட்டதாகவும், அதனால் அவர்கள் தற்கொலைக்கு முயன்றதாகவும் குற்றம் சாட்டினார். குழந்தைத்திருமணங்களைக் குறித்து விசாரிக்க வராத ஒன்றிய அரசின் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ஆளுநரின் குற்றச்சாட்டை ஏற்று விசாரிக்கவந்தது.

அதுமட்டுமல்ல, தானும் திருமணம் செய்த போது அது குழந்தைத் திருமணம் தான்என்றார் ஆளுநர். அவர் ஒன்றும், 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் அல்லர்.1929-இல் இந்தியாவில் குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் வந்துவிட்டது, ஆனால், 1970களில் திருமணம் செய்த ஆர்.என்.ரவி சட்டத்தை மீறித் திருமணம்செய்தவர்தானே… இவர் முன்னாள் அய்.பி.எஸ். என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

தமிழ்நாட்டில் இத்தகைய கொடுமை நிகழ்ந்துவிடக் கூடாது என்று முயற்சி எடுத்த திராவிட மாடல் அரசின் முயற்சிகளைத் தடுத்து, திசைதிருப்பி,தீட்சிதப் பார்ப்பனர்களைக் காப்பாற்ற ஒன்றிய அரசு முழு வீச்சில்இயங்கியது. இவற்றின் பின்னால் இருப்பது எல்லாம் ஸநாதனமும்,பார்ப்பனியமும் அல்லாமல் வேறு என்ன? மனித நெறிமுறைகளுக்கு எதிரானது பார்ப்பனியம் – வேதம் – ஸநாதனம் – இந்து மதம்… இவையெல்லாம்!

இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டுமானால், அது இத்தகைய ஸநாதனவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவதன் மூலம் மட்டுமே நடக்கமுடியும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *