புதுடில்லி, அக்.6 ‘‘பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, பாதுகாப்பு நடவடிக்கைகள் வெறும் காகித அளவிலேயே நின்றுவிடக் கூடாது. குற்ற வாளிகள் அஞ்சி நடுங்கும் அளவுக்கு வலுவானதாக இருக்க வேண்டும். கோப்புகளை மட்டும் ஆராய்ந்து கொண்டிருக்காமல் காவல்துறையினர் களத்தில் இறங்கினால் மட்டுமே பாலியல் வன்கொடுமைகள் போன்ற குற்றங்கள் நடப்பது குறையும்’’ என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டில்லி மற்றும் தேசிய தலை நகர் பிராந்தியத்தில், ஆஸ்தா குன்ஜ் பூங்கா அருகே 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, ஸ்வரூப் நகரில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்குப் பின் படுகொலை செய்யப்பட்டது. ஓடும் படுக்கை வசதி கொண்ட பேருந்தில், ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தூக்கி வீசப்பட்டது போன்ற சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இவை ‘நிர்பயா’ வழக்கில் நடந்த கொடூரங்களை நினைவுப்படுத்துவதாக கவலை தெரிவித்திருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.பி.பர்திவாலா தலைமையிலான அமர்வில், நேற்று (5.10.2026) இவ்வழக்கு மீண்டும் விசார ணைக்கு வந்தது.
அப்போது, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க ஒன்றிய அரசும், டில்லி காவல்துறையினரும் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்பது குறித்து ஆராய்ந்தது. மேலும், டில்லியில் பாதுகாப்பு இல்லாத பகுதிகளைத் தொடர்ந்து கண்கா ணிக்கவும், குற்றச் செயல்கள் நிகழும்போது உடனடி நடவ டிக்கை எடுக்கவும் ஏதேனும் நடைமுறை பின்பற்றப்படுகிறதா என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் அஞ்சி நடுங்கும் அளவுக்கு காவல் கட்டமைப்புத் திறன் வலுவானதாக உருவாக்கப்பட வேண்டும். குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் வெறும் கோட்பாடு என்ற அள வில் நின்றுவிடக் கூடாது. குற்றச் செயல்களில் ஈடுபட்டால், விரைவான மற்றும் கடுமையான விளைவுகளைச சந்திக்க நேரிடும் என்பதை குற்றவாளிகள் உண ரும் அளவுக்கு அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றம் புரியத் துணியும் மனி தனின் மனதில், அச்சத்தை உருவாக்க வேண்டும். அப்படிச செய்யாவிட்டால், குற்றங்களைத் தடுக்க முடியாது. டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பெண்கள் இரவு 10 மணிக்கு நடந்து சென்றாலும், மெட்ரோவில் பயணித்தாலும், முழு பாதுகாப்பை உணரும் வகையிலான சூழலை அரசு உருவாக்க வேண்டும்.
நிலைமை தீவிரமாக இருக்கும்போது, கடுமையான நடவடிக்கைகளை எடுக்க காவல்துறையினர் தயக்கம் காட்டக் கூடாது. அடிப்படை மை தர வேண்டும். பெண்கள் பாது காப்பு விவகாரத்தில் வெறும் கோப்புகளை மட்டும் ஆய்வு செய்து கொண்டிருக்கக் கூடாது.
களத்தில் இறங்கி பொதுமக்க ளுடன் நேரடி தொடர்பில் இருக்க வேண்டும். சமூகத்தில் அடித்தட்டு மக்களை நேரடியாகச சந்தித்து, பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பது அவசியம். வெறும் காகித அளவிலான பணிகளும், புள்ளி விவரங்களும் மட்டுமே பெண்களின் பாது காப்பை உறுதி செய்துவிட முடி யாது. கள நிலவரங்களை நேரடி யாக கண்டறிந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘‘பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, பாதுகாப்பு நடவடிக்கைகள் வெறும் காகித அளவிலேயே நின்றுவிடக் கூடாது. குற்ற வாளிகள் அஞ்சி நடுங்கும் அளவுக்கு வலுவானதாக இருக்க வேண்டும். கோப்புகளை மட்டும் ஆராய்ந்து கொண்டிருக்காமல் காவல்துறையினர் களத்தில் இறங்கினால் மட்டுமே பாலியல் வன்கொடுமைகள் போன்ற குற்றங்கள் நடப்பது குறையும்’’ என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.