இந்திய அணுசக்தித் துறையில் தனியார் நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் மோடி அரசு தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, மே 7 இந்தியாவின் அணுசக்தித் துறையில் இது வரை இருந்துவந்த அரசின் முற்றுரிமையை உடைத்து, தனியார் மற்றும் அந்நிய நிறுவனங் களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் அபாயகர மான நகர்வை மோடி அரசு மேற்கொண் டுள்ளது.

கடந்த ஆண்டு நிறைவேற்றப் பட்ட ‘சாந்தி’  சட்டத்தின் பின்னணியில், அமெரிக் காவின் உயர்மட்ட அணுசக்தித் தூதுக்குழுவினர் வரும் மே 17 முதல் 21 வரை இந்தியாவிற்கு வரவுள்ள செய்தி மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

பல பத்தாண்டுகளாக பொதுத்துறை நிறு வனங்களின் கட்டுப்பாட்டில் இருந்த அணு உலை இயக்கம் மற்றும் எரிபொருள் மேலாண்மை ஆகிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பணிகளில், ரிலையன்ஸ், அதானி, டாடா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிப்பது என்பது தேசியப் பாதுகாப்பிற்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

‘சாந்தி’ சட்டத்தின் மூலம் 1962-ஆம் ஆண்டு அணு சக்திச் சட்டம் மற்றும் 2010-ஆம் ஆண்டு சிவில் அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம் ஆகியவை திருத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக, ஒருவேளை அணு விபத்துகள் ஏற்பட்டால் உபகரணங்களை வழங்கிய விநியோகஸ்தர்கள் மற்றும் அவற்றை இயக்கும் தனியார் நிறு வனங்கள் ஏற்க வேண்டிய சட்டப் பூர்வப் பொறுப்பு முற்றிலுமாக நீர்த்துப்போகச் செய்யப் பட்டுள்ளது. இது இந்திய மக்களின் உயிரோடு விளையாடும் ஒரு ஆபத்தான சூதாட்டமாகும்.

இலகு நீர் உலை
தொழில் நுட்பம்

மேலும், இந்தியா இதுவரை சுயசார்புடன் கையாண்டு வந்த கனநீர் உலைத் (PHWR) தொழில் நுட்பத்தை ஓரங்கட்டிவிட்டு, அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளின் லாபத்திற்காக இலகு நீர் உலை (LWR) தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்ய முனை வது நம்மை மீண்டும் அந்நிய சக்திகளிடம் அடகு வைக்கும் செயலாகும். உள்நாட்டுத் தொழில் நுட்பத்தில் மேம்பாடு காண்பதை விடுத்து, அமெரிக்காவின் வர்த்தக பேர சூதாட்டக் குழுக்களின் அழுத் தத்திற்குப் பணிந்து, கடன் சுமையை அதிகரிக்கும் இறக்குமதித் திட்டங் களை இந்தியா முன்னெடுப்பது பொருளாதார ரீதியாகவும் தற் கொலைக்குச் சமமானது.

குறிப்பாக, ஆந்திரா, மகாராட் டிரா மற்றும் குஜராத் மாநில முதலமைச்சர்களுடனும், இந்தியா வின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களு டனும் அமெரிக்கத் தூதுக்குழு நடத்தவுள்ள ரகசியப் பேச்சுவார்த்தைகள், இந்திய அணு சக்தித் துறையை ஒரு வணிகச் சந்தையாக மாற்றும் சதியையே காட்டுகின்றன. பாது காப்புக் கட்டுப்பாடுகள் மற்றும் விபத்து கால இழப்பீட்டு விதிகளில் செய்யப்பட்டுள்ள தளர்வு கள், தனியார் லாபத்திற்காக இந்திய குடிமக்க ளின் பாதுகாப்பை அட மானம் வைப்பதாகும். இந்தியாவின் அதி முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தித் துறையில் அந்நிய முதலீடும், தனி யார் ஆதிக்கமும் ஊடுருவுவதை முற்போக்கு ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து வீரியத்துடன் எதிர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *