பத்தாயிரம் காலிப் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு நாளை அறிவிப்பு வெளிவருகிறது

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக். 5-  லட்சக் கணக்கான தேர்வர்கள் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு நாளை (6ஆம் தேதி) வெளியிடப்படுகிறது. இத்தேர்வு மூலம் ஏறத்தாழ 10 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப் படுகிறார்கள். 2026ஆம் ஆண்டுக் கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையில் இடம் பெற்றுள்ள 6 தேர்வுகளில் 5 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப் பட்டு 3 தேர்வுகள் நடத்தி முடிக்கப் பட்டுள்ளன.

2 தேர்வுகள் விரைவில் நடத்தப்பட உள்ளன. கடைசியாக இடம் பெற்றுள்ள குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு அக்.6ஆம் தேதி வெளியிடப்பட்டு தேர்வு டிச.20ஆம் தேதி நடைபெறும் எனத் தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நாளை (6ஆம் தேதி) இணையதளத்தில் வெளியிடுகிறது. பொதுவாக குரூப்-4 தேர்வில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3), கிராம நிர்வாக அலுவலர், வரைவாளர், பில் கலெக்டர், வனக்காவலர் உள்ளிட்ட பதவிகள் இடம்பெறும். கடந்த 2024 குரூப்-4 தேர்வில் 4,662 காலியிடங்கள் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2024ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகங்கள், தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் குரூப்-சி நிலையிலான பணியிடங்கள் குரூப்-4 தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. அதோடு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள காலிப்பணியிடங்களும் டிஎன்பி்எஸ்சி மூலம் நிரப்பப்படும் என அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது.

எனவே, நகர்ப்புற உள்ளாட்சி களில் உள்ள குரூப்-சி பதவிகளில் அதிக காலி யிடங்கள் இருப்பதால் அந்த இடங்களும் குரூப்-4 தேர்வின் கீழ் வருவதால் நாளை வெளியிடப்படும் குரூப்-4 தேர்வு அறிவிக்கையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்எஸ்எல்சி தகுதி: குரூப்-4 தேர்வை பொறுத்தவரையில் பெரும்பாலான பதவிகளுக்கு அடிப்படை கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும். ஒருசில பதவிகளுக்கு மட்டுமே பட்டப்படிப்பு கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு அடிப்படை கல்வித்தகுதியுடன் கூடுதலாக தொழில்நுட்பத் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

குரூப்-4 தேர்வுக்கான அடிப்படை கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு என்ற போதிலும் முதுகலை பட்டதாரிகளும், பட்டதாரிகளும் தான் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த குரூப்-4 தேர்வுக்கு 13.89 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 11.36 லட்சம் பேர் மட்டுமே தேர்வெழுதினர். இந்த ஆண்டு குரூப்-4 தேர்வுக்கு 15 லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என தெரிகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *