கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 25.9.2026

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* மு.க.ஸ்டாலின், மம்தா உள்ளிட்ட தலைவர்கள் தோற்றது எதேச்சையானது அல்ல தலைமைத் தேர்தல் ஆணையரின் சதியே காரணம்: 48 மணி நேரத்தில் பதவி விலகாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம்: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு.

* காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரத் திட்டம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘தலைமை ஆசிரியர் பிடியை இழந்து வருகிறார்’: ஒன்றிய அரசின் ‘சிந்தன் பைதக்’ குறித்து காங்கிரஸ் கிண்டல். தகுதியுள்ள அனைவருக்கும் அரசு நலத் திட்டங்கள் 100% சென்றடைவதை உறுதி செய்வதே கூட்டத்தின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டது.தேர்தல் ஆணையத்தில் ஏற்பட்ட குழப்பமும் ராகுல் காந்தியின் அதிரடி செய்தியாளர் சந்திப்பும், பிரதமர் மோடி தலைமையிலான ‘சிந்தன் பைதக்’ மீதான கவனத்தை முற்றிலும் திசைதிருப்பி விட்டதாக காங் கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்.

தி இந்து:

* தேர்வர்களின் யு.பி.எஸ்.சி. மதிப்பெண்களை பாடவாரியாக வெளியிட மத்திய தகவல் ஆணையர் (CIC) பரிந்துரை: 2018 முதல் விரிவான மதிப்பெண் விவரங்களை வெளியிடுவதை நிறுத்தியதற்கான அதிகாரப்பூர்வ முடிவு பதிவு எதுவும் இல்லை எனக் கூறி, அந்த நடைமுறையை மீண்டும் கொண்டு வர மத்திய தகவல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *