கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 4.9.2026

இணையவழி கையெழுத்து இயக்கம்

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு குறித்து திப்கே சவால்: கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்து கேள்வி எழுப்பி, தனது பட்டச் சான்றிதழ்களை பொதுமக்கள் முன் வெளியிடுமாறு சவால் விடுத்துள்ளார்.

* ‘சுத்திகரிப்பு’ விவகாரம் குறித்து கார்கே நட்டாவுக்கு கடிதம்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உத்தரகாண்ட் முதலமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ‘சுத்திகரிப்பு’ நிகழ்வு தொடர்பாக பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் எழுதி, எப்.அய்.ஆர் பதிவு செய்யக் கோரியுள்ளார். இந்தச் சம்பவம் அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகளுக்கு எதிரானது என்றும், தீண்டாமை மற்றும் பாகுபாட்டை ஊக்குவிக்கும் இத்தகைய நடைமுறைகள் மீது கடும் நடவடிக்கை தேவை என்றும் கார்கே தெரிவித்துள்ளார்.

தி இந்து:

* “மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஓபிசி பட்டியல்கள் பயன்படுத்தப்படவில்லை; அவை ஜாதிகள் அல்ல, வகுப்புகளை உள்ளடக்கியவை” என கணக்கெடுப்பு துறையின் புதிய வாதம்: ஓபிசி சமூகங்களை தனித்தனியாக பட்டியலிட்டு கணக்கெடுக்க வேண்டும் என ஓபிசி அமைப்புகளும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்; தற்போதைய கணக்கெடுப்பு முறையின் பயனும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

தி டெலிகிராப்:

* “மண்டையை உடைத்தேன்; சிறைக்கு கூட செல்லவில்லை – பாஜகவின் ‘ஆசீர்வாதம்’ என ஹிந்துத்துவ செயற்பாட்டாளர் ஸ்வதந்திரா பரத்வாஜ் இறுமாப்புப் பேச்சு”: ஜந்தர் மந்தர் போராட்டத்தின் மீதான காவல்துறை நடவடிக்கை குறித்து ஸ்வதந்திர பாரத்வாஜ் அதிர்ச்சியூட்டும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்; “மோடி ஜி எனது மூத்த சகோதரர், எனக்கு அனைவரின் ஆதரவும் உள்ளது” எனக் கூறியுள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* “தேசியவாதக் கல்விக்காக, ஓராண்டில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் 1,000 பள்ளிகள்: மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தகவல்: மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு மாவட்டம், நகராட்சி, ஊராட்சியிலும் ஆர்.எஸ்.எஸ்-ன் வித்யா பாரதி மூலம் ஓராண்டுக்குள் குறைந்தது 1,000 பள்ளிகளை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; நான்கு கல்வித் துறைகளையும் ஒன்றிணைக்கவும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் சுவேந்து தெரிவித்துள்ளார்.

* பீகாரில் சிராக் பாஸ்வான் – ஜிதன் மாஞ்சி மோதல்: எஸ்.சி. கிரிமிலேயர் விவாதம் என்.டி.ஏ-வில் பிளவு”: எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீட்டில் ‘கிரீமிலேயர்’ முறையை கொண்டு வரும் முயற்சிக்கு சிராக் பாஸ்வான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்; இடஒதுக்கீடு பொருளாதார அடிப்படையிலானது அல்ல, பல நூற்றாண்டுகளாக நிலவிய சமூகப் பாகுபாடு மற்றும் தீண்டாமையை எதிர்கொள்வதற்கானது என வலியுறுத்தினார்.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *