டெக்கான் கிரானிக்கல், சென்னை :
*புதிய வழக்குகளுக்கு ‘தொழில்துறை உறவுகள் குறியீடு 2020’ சட்டம் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகள் 1947 தொழில்துறை தகராறு சட்டத்தின் கீழ் தொடர்ந்து விசாரிக்கப்பட வேண்டும். அரசின் இறையாண்மை நடவடிக்கை களைத் தவிர, தொழிலாளர்–முதலாளி உறவு உள்ள அனைத்து நிறுவனங்களும் ‘தொழில்’ என்ற வரையறைக்குள் வரும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* டில்லியில் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரும், இளைஞர்களும் நடத்திய பேரணியின் போது காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்க மேனாள் நீதிபதி சுபாஷ் ரெட்டி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஜாதிப் பாகுபாடு குறித்த யு.ஜி.சி விதிகள்: பாஜக அரசு, உயர் ஜாதியினரை சமாதானப்படுத்தும் நோக்கிலும், உத்தரப் பிரதேச தேர்தலில் அவர்களின் அதிருப்தி பாதிக்காத வகையிலும் யு.ஜி.சி.யின் ஜாதிப் பாகுபாடு விதிகளை மறுபரிசீலனை செய்கிறது. அதே நேரத்தில், ஓபிசி மற்றும் எஸ்..சி., எஸ்.டி. மக்களின் ஆதரவை இழக்காமல் இருக்கவும் எச்சரிக்கையுடன் செயல்படுகிறது.
தி இந்து:
*என்.டி.ஏ., தேசிய கல்விக் கொள்கை ஆகியவை தனியார் பயிற்சி நிறுவனங்கள் செழிக்க மட்டுமே உதவியுள்ளன – மாணவர் தலைவர் நேஹா போரா கருத்து
தி டெலிகிராப்:
*நாடாளுமன்றத்தில், சமூக வலைத்தளங்கள் மீதான ஒடுக்குமுறை குறித்த கேள்விகளுக்கு மோடி அரசு பதிலளிக்க மறுக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* கருத்தியல் ரீதியான திணிப்பு முயற்சி தங்களுக்கு எல்லாம் தெரியும் என ஆர்எஸ்எஸ் நினைக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
– குடந்தை கருணா
