இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதை வழக்கமாகக் கொண்டது ஆரியம்;
ஆரியம் என்றாலும், ஆர்எஸ்எஸ் என்று சொன்னாலும் ஒன்றுதான்!
பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரிகாரம் தேடக்கூடிய ஒரு திட்டம்தான் இட ஒதுக்கீடு!
ஆரியம் என்றாலும், ஆர்எஸ்எஸ் என்று சொன்னாலும் ஒன்றுதான்!
பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரிகாரம் தேடக்கூடிய ஒரு திட்டம்தான் இட ஒதுக்கீடு!
சென்னை, செப்.15 இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதை வழக்கமாகக் கொண்டது ஆரியம்; ஆரியம் என்று சொன்னாலும் ஒன்றுதான், ஆர்எஸ்எஸ் என்று சொன்னாலும் ஒன்றுதான். பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரிகாரம் தேடக்கூடிய ஒரு திட்டம்தான் இட ஒதுக்கீடு என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
- இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதை வழக்கமாகக் கொண்டது ஆரியம்; ஆரியம் என்றாலும், ஆர்எஸ்எஸ் என்று சொன்னாலும் ஒன்றுதான்! பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரிகாரம் தேடக்கூடிய ஒரு திட்டம்தான் இட ஒதுக்கீடு!
- ஜாதி வாரிக் கணக்கெடுப்பில் குழப்பம் ஏற்படுத்தும் ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!
- தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன உரை
- இட ஒதுக்கீடா, ஜாதி அடிப்படையிலா? என்றார்கள்!
- பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு கொடுத்த பெருமை!
- இட ஒதுக்கீட்டை முதன்முதலில் ஆரம்பித்தவர்கள் பார்ப்பனர்கள் தான்!
- பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரிகாரம் தேடக்கூடிய ஒரு திட்டம்தான் இட ஒதுக்கீடு!
- 69 சதவிகித இட ஒதுக்கீடு என்பது சட்டப் பாதுகாப்போடு இருக்கிறது!
- சமூக நீதியாளர்களை, ‘அர்பன் நக்சல்கள்’ – அவர்கள் எல்லாம் தீவிரவாதிகள்’’ என்றார்கள்!
- நாங்கள் பட்டம், பதவியைத் தேடுகிறவர்கள் கிடையாது!
- பேக்வர்ட் கிளாஸ் என்று சொல்லும்போது, பேக்வர்ட் என்று போட மாட்டார்கள்!
ஜாதி வாரிக் கணக்கெடுப்பில் குழப்பம் ஏற்படுத்தும் ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!
கடந்த 11.9.2026 அன்று முற்பகல் 11.30 மணிக்கு, சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே திராவிடர் கழகம் சார்பில், ஜாதி வாரிக் கணக்கெடுப்பில் குழப்பம் ஏற்படுத்தும் ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.
அவரது கண்டன உரை வருமாறு:
தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன உரை
இயக்கக் குடும்பத்தவர்களே, இந்தக் கண்டன ஆர்பாட்டத்திலே கலந்து கொள்ளக்கூடிய சிறப்பு மிகுந்த தோழர்களே, தோழியர்களே, ஊடகவியலாளர்களான அன்பு நண்பர்களே! காவல்துறை பொறுப்பாளர்களே, உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்!
செய்தியாளர்களுக்கான ஒரு செய்தியை குறிப்பிடு கிறபோது, சுருக்கமாக அவர்களுக்குச் சொல்ல வேண்டும் சில நிமிடங்களில் என்பதற்குரிய செய்தி என எதைச் சொன்னேனோ அதை சற்று விரிவாக்கிச் சொன்னால் போதுமானதாகும். இங்கே இருக்கக்கூடிய மக்களுக்குத் தெரிய வேண்டும்; இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதை வழக்கமாகக் கொண்டது ஆரியம்; ஆரியம் என்று சொன்னாலும் ஒன்றுதான், ஆர்எஸ்எஸ் என்று சொன்னாலும் ஒன்றுதான்.
இட ஒதுக்கீடா, ஜாதி அடிப்படையிலா? என்றார்கள்!
இந்த இரண்டையும் சேர்த்துச் சொல்ல வேண்டும் என்றால், அதனுடைய அரசியல் வடிவம், மோடி அரசு; பிஜேபி அரசு. ஆகவே, மிகத் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், ஜாதி என்பதையேகூட வகுப்பு மாதிரி என்று இதைச் சொல்ல வேண்டும் எனச் சொல்கிறார்கள். இந்த இட ஒதுக்கீடு என்பதை ஆரம்பத்திலிருந்து முதல் முதலில் தொடக்கியது யார் என்று சொன்னால், நாம் அல்ல; ‘‘அய்யோ இட ஒதுக்கீடா? இந்த மாதிரி மக்களைப் பிரிக்கலாமா? ஜாதி அடிப்படையிலா?’’ என்று சொல்லக்கூடியவர்கள் இருக்கிறார்களே! அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கும்போது, முதலில் இளைய தலைமுறையினருக்கும், புரியாதவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பாடம் மாதிரி, கதை மாதிரி இதை விளக்கிச் சொல்ல வேண்டும்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு கொடுத்த பெருமை!
ஏனென்றால், 18 வயதுள்ளவர்களுக்கு வாக்குரிமை நல்ல எண்ணத்தில் கொடுத்தார்கள். நல்ல எண்ணத்தில் கொடுத்தாலும், அவர்கள் விளையாட்டுப் பிள்ளை மாதிரி, அடுப்புக்கு வேண்டிய நெருப்பு எது? வீட்டில் கூரைக்கு மேல் வைக்க வேண்டிய நெருப்பு எது? என்று தெரியாத ஒரு பருவம். ஆகவே, அவர்களைத் தெளிவானவர்களாகச் செய்ய வேண்டிய அவசியம் நமக்கு உண்டு. அந்த அடிப்படையிலே சொல்ல வேண்டுமானால், முதல் முதலில் இந்தியாவிலேயே வகுப்புவாரி உரிமை என்பதை மூன்று மாநிலங்கள் தான் வழிகாட்டியன. அதிலும் குறிப்பாக 1902 ஆம் ஆண்டு, மகாராட்டிரத்தில் 50% இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்று கொடுத்த பெருமை சத்திரபதி சாகு மகராஜ் அவர்களைச் சார்ந்தது.
கோல்காப்பூர் ஒரு ராஜ்ஜியம். ஒரு சமஸ்தானம். ஒரு ராஜாவினுடைய ஆட்சி நடந்த சிறிய இடம். அதே மாதிரி மைசூர் ராஜ்ஜியம். வெள்ளைக்காரர்களை அதிகாரியாக நியமித்த உடனே, மில்லர் என்பவர் ஓர் அறிக்கை கொடுத்தார். அதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வந்தபோது அத்தனைப் பார்ப்பனர்களும் கடுமையாக எதிர்த்தார்கள். ஆனால், ஜெயசாம்ராஜ உடையார் அரசர் இதில் தெளிவாக இருந்தார், நியாயமாக இருக்க வேண்டும் என்பதற்காக.
அந்தக் காலகட்டத்திலேயே 1920 ஆம் ஆண்டிலேயே, பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று சொல்லி, ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயராலே மக்களுக்கு அறிமுகமான திராவிடர் இயக்கம்தான் முதன் முதலில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று தொடங்கி, தெளிவாக அதற்கு ஓர் ஆணை பிறப்பித்தது, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ இருந்த தனி மாநிலங்களிலே சென்னை மாகாணம் என்பது ஒன்று.
இட ஒதுக்கீட்டை முதன்முதலில் ஆரம்பித்தவர்கள் பார்ப்பனர்கள் தான்!
எனவே, இரண்டு சமஸ்தானம் கொடுத்தார்கள். மாகாணம் கொடுத்தார்கள். ஆகவே, முதன்முதலில் கொடுத்தது தமிழ்நாடுதான். இந்த இட ஒதுக்கீட்டை யார் ஆரம்பித்தது என்று சொன்னேன். நாம் ஆரம்பிக்க வில்லை, பார்ப்பனர்கள் தான் ஆரம்பித்தார்கள்.
மனுதர்மத்தில்தான், கல்வியை சூத்திரனுக்குக் கொடுக்கக்கூடாது. கல்விக்கு, நாங்கள்; அதே மாதிரி ஆட்சிக்கு சத்திரியர்கள். அடுத்தது வியாபாரம் என்றால், வைசியர்கள். இம்மூவருக்கும் அடிமை வேலை செய்ய வேண்டியவர்கள்தான் சூத்திரர்கள். அவர்களுக்குப் படிப்பைக் கொடுக்கக் கூடாது, உரிமை கொடுக்கக் கூடாது; அவர்களுக்கு எந்த உரிமையுமே இல்லை என்று ஆக்கினார்கள். காலம் காலமாக கல்விக் கண் பெறாத ஒரு சமுதாயமாக, அடிமைச் சமுதாயமாக இருந்ததை மாற்றித்தான் – அதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். ஒரு நிவாரணம் உண்டாக்க வேண்டும் என்பதற்காக வந்த திட்டம்தான் இட ஒதுக்கீடு – வகுப்புவாரி உரிமை.
பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரிகாரம் தேடக்கூடிய ஒரு திட்டம்தான் இட ஒதுக்கீடு!
அதற்கு ஆங்கிலத்தில் நல்ல பெயர் வைத்தார்கள், ‘காம்பன்ஷேட்டரி ஜஸ்டிஸ்’ என்று. சோசியல் ஜஸ்டிஸ், சமூகநீதி என்பது பின்னாளில். முதலில் எவையெல்லாம் காலம் காலமாக மறுக்கப்பட்டதோ, அதற்கு ஒரு காம்பன்சேஷன் – இழப்பீடு கொடுப்பது. அந்த இழப்பீடு கொடுக்கிற மாதிரியான சூழல். அதனால்தான் இந்த இட ஒதுக்கீடு; நாம் ஆரம்பிக்கவில்லை. பார்ப்பனர்கள்தான் ஆரம்பித்தார்கள். ‘‘நீங்கள் எங்களுக்கு வியாதியைக் கொடுத்தீர்கள், அதனால் பாதிக்கப்பட்டோம்’’ – அப்படி பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரிகாரம் தேடக்கூடிய ஒரு திட்டம்தான் இட ஒதுக்கீடு.
69 சதவிகித இட ஒதுக்கீடு என்பது
சட்டப் பாதுகாப்போடு இருக்கிறது!
சட்டப் பாதுகாப்போடு இருக்கிறது!
இதை எப்படி எல்லாம் தடுக்க வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு முறையும், இட ஒதுக்கீடு கொடுப்பதும், பறிப்பதும்தான் நடக்கின்றது. ஒரு கையில் கொடுப்பார்கள்; இன்னொரு கையில் மறைமுகமாக அதை எடுப்பார்கள். இப்படிப்பட்ட திட்டத்தைச் செயல்படுத்த விடாமல், தந்தை பெரியார் காலத்திலிருந்து, நீதிக்கட்சி காலத்திலிருந்து, தொடர்ந்து திராவிட இயக்கம் – மு.க.ஸ்டாலின் ஆட்சியாக இருந்தா லும், யாருடைய ஆட்சிக் காலமானாலும், கடைசி வரையில் போராடிப் போராடித்தான் தமிழ்நாட்டில் இந்த உரிமையில் சாதாரணமாக யாரும் கை வைக்க முடியாததற்கு அடையாளம், 69 சதவிகித இட ஒதுக்கீடு என்பது சட்டப் பாதுகாப்போடு இருக்கிறது. இதில் யாரும் அவ்வளவு சுலபமாக கைவைத்துவிட முடியாது.
சமூக நீதியாளர்களை, ‘அர்பன் நக்சல்கள்’ – அவர்கள் எல்லாம் தீவிரவாதிகள்’’ என்றார்கள்!
மோடி அரசைப் பார்த்து நாங்கள் ஒரே ஒரு கேள்வி யைக் கேட்கிறோம். ஜாதிவாரிக் கணக்கெடுப்பை முதலில் எதிர்த்தீர்கள். ஆனால், ஜாதிவாரிக் கணக்கெ டுப்பை நடத்தவேண்டும் என்று திராவிடர் கழகம், முற்போக்குக் கருத்துள்ளவர்கள், திமுக, அதே மாதிரி காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் ராகுல் போன்றவர்கள் எல்லாம் சொன்ன உடனே, சமூக நீதியாளர்கள் போராடியபோது என்ன சொன்னார்கள் தெரியுமா? ‘‘அவர்கள் எல்லாம் ‘அர்பன் நக்சல்கள்’ – அவர்கள் எல்லாம் தீவிரவாதிகள்’’ என்றார்கள். ஆனால், அவர்களுக்கு நெருக்கடி வந்தவுடன், பீகார் மாநிலத்தில் வெற்றி பெற்றாகவேண்டும்; ஏனென்றால், ஒன்றிய ஆட்சிக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற நாற்காலியை எப்படியாவதுத் தாங்கி நிற்கக் கூடியதை செய்யவேண்டும். அரசியல் ரீதியாக அவர்களுக்குப் பெரும்பான்மை இல்லை. தேர்தலில் வெற்றி பெறவேண்டுமென்றால், பிற்படுத்தப்பட்ட வர்களுடைய ஓட்டு வேண்டும். அதனால் உடனே என்ன சொன்னார்கள் என்றால், ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நாங்கள் ஆதரிக்கிறோம் என்றார்கள். அப்படிச் சொன்ன திலிருந்து பின்வாங்கவேண்டும் என்பதால், சும்மா வாய் வார்த்தையாகச் சொல்லிவிட்டோம்; அதை நடத்தக்கூடாது; அதற்கு என்ன திட்டம் என்று யோசனை செய்துதான், அமித்ஷாக்கள் இந்தத் திட்டத்தை இப்போது உருவாக்கி இருக்கிறார்கள்.
தலைப்பே ஜாதிவாரிக் கணக்கெடுப்பு! அதற்குப் பிறகு என்ன அதில் குயுக்தி, வகுப்புவாரி என்று. வகுப்பு என்றால் என்ன? ‘தானிக்குப் பெயர் ஏணி.’’ அதுதான் மிக முக்கியம். அதை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டாமா? ஆகவே, அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறது. நாம சட்டப்படி பேசக்கூடியவர்கள். நான் உங்களுக்குச் சொன்ன ஒரு விளக்கம். ஆனால், இது சட்ட விளக்கம் என்றவுடன், கொஞ்சம் பேருக்குப் புரியாத மாதிரி இருக்கும். முதலில், நாம் சொல்லும்போது புரியாது. 69 சதவிகிதம் கூட புரியவில்லை என்று வழக்குரைஞர்களே சொன்னார்கள்; நிற்காது என்று சொன்னார்கள். அதுமட்டுமல்ல, ‘‘அது என்ன பல் குத்துகிற குச்சியா? நாக்கை வழித்துக் கொள்வதற்காகவா அந்தச் சட்டம்; கண்ணாடிக்குள் இருப்பதற்கா?’’ என்று சொன்ன தலைவர்கள் எல்லாம் உண்டு. ஆனால், இப்பொழுது எல்லோரும் என்ன சொல்கிறார்கள், ‘‘அய்யோ, 69 சதவிகித சட்டத்திற்குப் பாதுகாப்பு இல்லை’’ என்று இப்பொழுதும் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று நம்மைப் பார்த்துக் கேட்கிறார்கள்.
நாங்கள் பட்டம், பதவியைத் தேடுகிறவர்கள் கிடையாது!
நேற்று எப்படி இருந்தாலும் பரவாயில்லை; யார் பெருமையும் நமக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. விஷயம் நடக்க வேண்டும். நம்முடைய மக்களுக்கு யார் கொண்டு வந்தால் என்ன? திராவிடர் கழகம் அதை வைத்துக்கொண்டு, பதவிக்குப் போகப் போகிறதா? அல்லது நாங்கள் ஏதாவது பட்டம், பதவியைத் தேடுகிறவர்களும் கிடையாது. ஒன்றே ஒன்றைத்தான் உங்களுக்குச் சொல்கிறேன். முன்னால் இருந்த அந்தக் குழப்பத்திற்கெல்லாம் விளக்கம் சொல்லும்போது, இப்பொழுது இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் என்று ஒரு வார்த்தை வருகிறது. கொஞ்சம் விவரம் தெரிந்த நம்ம ஆட்கள் கூட புரிந்துகொள்ள வேண்டும்.
பேக்வர்ட் கிளாஸ் என்று சொல்லும்போது, பேக்வர்ட் என்று போட மாட்டார்கள்!
எஸ்சி, எஸ்டி, பேக்வர்ட் கிளாஸ் என்று சொல்லும்போது, பேக்வர்ட் என்று போட மாட்டார்கள். ‘அதர் பேக்வர்ட் கிளாஸ்’ மற்றைய என்று வருகிறது. ஏனென்று கேட்டால், ஷெட்டியூல்டு காஸ்ட் என்றால், 1935 இல், வெள்ளைக்காரர்கள் ஒரு பட்டியல் தயார் செய்து, அந்தப் பட்டியலுக்குள்ளே இன்னின்ன ஜாதிகள் என்று சொன்னார்கள். அதனால்தான், தமிழில் அதை மொழிப் பெயர்க்கும் போது, ‘பட்டியல் ஜாதிகள்’ என்று மொழி பெயர்த்தார்கள். பழங்குடியினர், ஷெட்யூல்ட் டிரைப் இந்த இரண்டுக்கும் சட்டப்படி வரையறை இருக்கிறது. ஆனால், பேக்வர்ட் கிளாஸ் என்பதற்கு என்ன? எது எதுவென்று சொல்ல முடியாது.
(தொடரும்)
