மணமகனை பிடிக்காத மணப்பெண்! கடைசி நேரத்தில் காவல் துறைக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து திருமணத்தை நிறுத்தினார்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

மீஞ்சூர், செப். 14- தாலி கட்டும் நேரத்தில் காவல் துறைக்கு தொலைபேசி செய்து மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார். இதனால் உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், ஊத்துக்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கும் பெற்றோர் திருமண நிச்சயதார்த்தம் செய்தனர். நேற்று முன்தினம் (13.9.2026) இரவு இருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந் தது. இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். நேற்று அதி காலையில் முகூர்த்த ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது மணப்பெண்ணின் பெற்றோர் தூங்கிக்கொண்டிருந்த மணப் பெண்ணை தட்டி எழுப்பி திருமணத்துக்கு தயாராக இருக்க சொன்னார்கள். ஆனால் மணப்பெண் அடம் பிடித்து மேக்கப் போட வேண்டாம், எனவும் மணவறைக்கு வரமாட்டேன். தாலி கட்டி கொள்ள விருப்பம் இல்லை என்று பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தார்.

இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. காலை 5.30 மணி அளவில் மணப் பெண் காவல்துறை அவசர உதவி எண் 100-க்கு போன் செய்து தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க உள்ளதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மீஞ்சூர் காவல் துறையினர், பொன்னேரி அனைத்து மகளிர் காவல் துறையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து வந்து மணப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். மணப்பெண் திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளாமல் பிடி வாதமாக இருந்தார்.

பின்னர் பெற்றோர் திருமண மண்டபத்தில் மணப்பெண்ணை விட்டு விட்டு சென்று விட்டனர். தனியாக இருந்த மணப்பெண்ணை காவல் துறையினர் பொன்னேரியை அடுத்த சோழவரம் ஒன்றியம் அலமாதி கிராமத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

திருமணம் நின்றதால் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். திருமண மண்டபத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த திருமண வரவேற்பு பேனர்கள் உடனடியாக அகற்றப்பட்டது.

மணப்பெண் வேறு ஏதாவது நபரை காதலிக்கிறாரா? அல்லது உறவினர்களுக்கிடையே பிரச்சினை உள்ளதா? என்பது குறித்து மீஞ்சூர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *