லண்டன், செப் 14 மாராட்டிரா துணைமுதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிற்கு லண்டனில் “உலகளாவிய தலைமைத்துவ விருது’’ வழங்கப்பட்டது. இந்த விருது பாஜக தலைமை கூட்டணிக் கட்சிகளை கட்டுக்குள் வைக்க பாஜகவின் வெளிநாட்டு அமைப்பு உருவாக்கியது என்ற உண்மை தற்போது வெளியாகி உள்ளது
ஏக்நாத் ஷிண்டேவுக்கும் பாஜக வின் தீவிர ஆதரவு ஊடகமான ஏ.என்.அய் செய்தி நிறுவனத்திற்கும் உலகலாவிய தலைமைத்துவ விருது வழங்கியது உலகளாவிய தலைமைத்துவத்திற்கும் ஏக்நாத் ஷிண்டேவிற்கு என்ன தொடர்பு என்று பலர் சமூகவலைதளத்தில் கேட்டுள்ளனர்.
இந்த நிலையில் விருது வழங்கிய அமைப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது ‘தி வேர்ல்ட் லீடர்ஷிப்’ போரம்: அமைப்பு, 2024-இல் இந்தியாவில் நிறுவனமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் நிறுவனர் நிசிகேத் லக்ஷ்மிகாந்த் ஜோஷி, ஒரு பாஜகவின் ராஜஸ் தானின் முக்கியமான தலைவர்களில் ஒருவர் ஆவார்.
அதே போல் விருதை இணைந்து வழங்கிய தி இந்தியா–யூகே அய்ரோப்பியன் பிசினஸ் ஃபோரம் அமைப்பின் தலைவர் விஜய் கோயல் இவர் பாஜகவின் ஒன்றிய அமைச்சராக இருந்தவர், டில்லி பாஜக தலைவராகவும் இருந்தார். இவரது சகோதரர் லண்டனின் பெரிய தொழில் அதிபர் ஆவார்
பாஜகவுடன் நேரடியாகத் தொடர்புடைய நபர்களே வெளி நாட்டில் ஓர் அமைப்பைத் தொடங்கி, என்.டி.ஏ கூட்டணியில் இருக்கும் தலைவர்களுக்கு விருதை வழங்கியுள்ளனர். இதை ஏதோ பன்னாட்டு அளவில் கிடைத்த மாபெரும் அங்கீகாரம் போல இங்கே ஊடகங்கள் சித்தரித்து வெளியிட்டிருக்கிறது.
இது செய்தியின் போர்வையில் நடத்தப்பட்ட வெறும் அரசியல் பிரச்சாரமே தவிர வேறில்லை.
கூட்டணித் தலைவர்களை முட்டாளாக்கும் முயற்சி
சொந்தக் கட்சியின் ஆட்களைக் கொண்டே வெளிநாடுகளில் பெய ரளவு அமைப்புகளை உருவாக்குவது, அதில் கூட்டணித் தலைவர்களுக்கு விருது வழங்கி பெருமைப்படுத்துவது போன்ற நாடகங்கள் எதற்காக? கூட்டணிக்குள் இருக்கும் தலைவர் களைத் திருப்திப்படுத்தவும், அவர்களைத் தங்களின் கட்டுப்பாட் டிற்குள் வைத்திருக்கவும் பாஜக முன்னெடுக்கும் இந்த போலி விளம்பர அரசியல் தேவையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
வேறு கட்சியினரை தங்கள் பக்கம் இழுக்க பாஜக ஈடி சிபிஅய் போன்ற அரச நிறுவனங்களை வைத்து மிரட்டுவது, பணம் கொடுத்து சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்குவது என்பதையும் கடந்து தற்போது விருதுகளை உருவாக்கி மயக்கும் வேலையையும் புதிதாக துவங்கி உள்ளது பாஜக.
வெளிநாட்டு அங்கீகாரம் என்ற பெயரில், தங்களது சொந்த ஆட்களைக் கொண்டே விருது களை உருவாக்கி கூட்டணித் தலைவர் களை பாஜக முட்டாளாக்கி வரு கிறது என்பதையே இந்நிகழ்வு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
