ஜெர்மனியில் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்கி,
சர்வாதிகாரி ஹிட்லர் அரசு ஆணை பிறப்பித்தார்!
இன்றைய ஆர்.எஸ்.எஸ். செய்ய முயற்சிப்பதை அன்றைக்கு சர்வாதிகாரி ஹிட்லர் செய்தார்!
ஆர்.எஸ்.எஸ். யார்? ஹிட்லர் பாரம்பரியம் தான்!
இதை நுண்மையாகக் கவனித்தவர் தந்தை பெரியார்தான் –
அவருடைய சிந்தனையினுடைய கூர்மைக்கு எடுத்துக்காட்டாகும்!
சர்வாதிகாரி ஹிட்லர் அரசு ஆணை பிறப்பித்தார்!
இன்றைய ஆர்.எஸ்.எஸ். செய்ய முயற்சிப்பதை அன்றைக்கு சர்வாதிகாரி ஹிட்லர் செய்தார்!
ஆர்.எஸ்.எஸ். யார்? ஹிட்லர் பாரம்பரியம் தான்!
இதை நுண்மையாகக் கவனித்தவர் தந்தை பெரியார்தான் –
அவருடைய சிந்தனையினுடைய கூர்மைக்கு எடுத்துக்காட்டாகும்!
சென்னை, ஜூலை 17 ஜெர்மனியில் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்கி, ஹிட்லர் அரசு ஆணை பிறப்பித்தார். இன்றைய ஆர்.எஸ்.எஸ். செய்ய முயற்சிப்பதை அன்றைக்கு சர்வாதிகாரி ஹிட்லர் செய்தார். ஆர்.எஸ்.எஸ். யார்? ஹிட்லர் பாரம்பரியம் தான். இதை நுண்மையாகக் கவனித்தவர் தந்தை பெரியார்தான் – அவருடைய சிந்தனையினுடைய கூர்மைக்கு எடுத்துக்காட்டாகும்! எனவே, ஜன நாயகத்தைக் கவிழ்ப்பதற்காக மட்டும் இங்கே அது போன்று செய்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். ஆரியம் என்றால், மேன்மையானது என்று அர்த்தம் என்று வியாக்கியானம் சொல்வதற்கு இடம் இல்லை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–4) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை
்கடந்த 6.7.2026 அன்று மாலை 6.30 மணியளவில், சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணி யம்மையார் அரங்கத்தில், பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல், திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில், ‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–4) என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
‘விடுதலை’ ஏடு யுத்தப் பிரச்சாரத்துக்காகத் தரப்பட்டது!
‘விடுதலை’ நாளிதழின் பவள விழா மலரில் வெளிவந்த கட்டுரையின் ஒரு பகுதியில்,
‘‘ஈரோட்டிலிருந்து வெளிவந்த ‘விடுதலை’ பத்திரிகை 18.9.1943 இதழோடு நிறுத்தப்பட்டது. ‘விடுதலை’ ஏடு யுத்தப் பிரச்சாரத்துக்காகத் தரப்பட்டது. 20.9.1943 முதல் 30.9.1945 வரை யுத்தப் பிரச்சாரத்தில் இருந்த ‘விடுதலை’ 6.6.19 46 முதல் பெரியாருக்கு கைக்கு வந்தது.’’
இதில் இன்னொரு வாய்ப்பு, அய்யா அவர்கள், ‘விடுதலை’யைக் கொடுத்தது மட்டுமல்ல, அதற்கு எல்லா வகையிலேயும் துணை நின்று யார் ஆதரிப்பார்? யார் எழுதினால் சரியாக இருக்கும்? என்று யோசித்தார், அப்பொழுது ‘விடுதலை’ ஆசிரியராக இருந்தார் குத்தூசி குருசாமி அவர்கள்.
‘‘அவரையே ஆசிரியராக வைத்துக்கொண்டு, ஊதியத்தை நீங்கள் தாருங்கள்’’ என்றார்.
அதாவது யுத்தப் பிரச்சாரத்துக்கு பத்திரிகை யைக் கொடுத்தது மட்டுமல்ல; ஆசிரியரையும் கொடுக்கிறார். குத்தூசி குருசாமியினுடைய எழுத்துகளால் மக்கள் ஈர்க்கப்பட்டனர்.
இது மிகவும் வித்தியாசமானது. பத்திரிகைக்கு யாரை வேண்டுமானாலும் ஆசிரியராக நியமிக்க லாம். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், பிரிட்டிஷார் என்ன சொன்னார்கள் என்றால், ‘‘உங்களுடைய அலுவலர்களை அப்ப டியே கொடுங்கள்; அவர்கள்தான் நன்றாகவும், பிரச்சினைகளை ஆராய்ந்தும் தெளிவாக எழுதுவார்கள்’’ என்றனர்.
கழகப் பேச்சாளர்களை –
போர்ப் பிரச்சாரகர்களாக நியமித்தனர்!
போர்ப் பிரச்சாரகர்களாக நியமித்தனர்!
பேச்சாளர்களை – போர்ப் பிரச்சாரகர்களாக (War Propagandists) நியமித்து, ஜெர்மனியை எப்படித் தோற்கடிக்கப் போகிறோம்; அதனுடைய தந்திரங்கள் என்ன? போன்ற விஷயங்களைப்பற்றி மக்கள் மத்தியில் பொதுக்கூட்டம் போட்டு விளக்கிப் பேசி, மக்களை ஈர்க்கவேண்டும் என்றனர்.
‘‘ஏதோ அரசாங்கப் பிரச்சாரம் என்றால், பொதுமக்கள் திரளமாட்டார்கள். ஏதோ கூலிக்குப் பேசுகிறான் என்று நினைப்பார்கள்’’ என்றனர்.
‘‘அதற்காக, நான் என்ன செய்யவேண்டும்?’’ என்றார்.
‘‘அதற்கும் உங்களுடைய பிரச்சாரர்களையே கொடுங்கள்; அவர்களுக்கெல்லாம் நாங்கள் அரசாங்கம் சம்பளம் கொடுக்கறோம்’’ என்றனர்.
அந்த சம்பளத்தை வாங்கிப் பிரச்சாரம் செய்தது, சம்பளத்திற்காக அல்ல. இந்தக் கொள்கைக்காகப் பிரச்சாரம் செய்தது யார் என்றால், பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி அவர்கள், பூவாளூர் பொன்னம்பலனார் அவர்கள். இந்த மாதிரி ஒரு பட்டியலே உண்டு. அதிலும் நடுநடுவே நம்முடைய பிரச்சாரத்தையும் சேர்த்து செய்வார்கள்.
பகுத்தறிவுப் பிரச்சாரம், மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரத்தை அவர்களுடைய ஊதியப் பணத்தைக் கொண்டே செய்வார்கள்.
பெரியாருடைய சிந்தனைக் கூர்மை எப்படிப்பட்டது என்பதற்கு அடையாளம்!
இரண்டாவது, அந்தப் பிரச்சாரப் பணிகளுக்கு மிகப்பெரிய அளவுக்கு ஒரு பெரிய தாக்கம் ஏற்பட்டது. அப்படி வரும்போது, அந்த நிலையை ஏன் பெரியார் எடுத்தார் என்பதற்குச் சரியான பதில் கிடைத்தது. இந்த இடத்தில்தான் அந்த விளக்கங்கள் மிக முக்கியமானவை. பெரியாருடைய சிந்தனைக் கூர்மை எப்படிப்பட்டது என்பதற்கு அடையாளம் அதுதான்.
‘விடுதலை’ மலரில் நான் எழுதிய கட்டுரையைப் படிக்கிறேன் கேளுங்கள்:
‘விடுதலை’ நாளேட்டினைத் தந்தை பெரியார் அவர்கள் தொடங்கி நடத்திக் கொண்டு வந்தபோது. இரண்டாவது உலகப்போர் மூண்டது. பிரிட்டனை, ஜெர்மனியும், ஜப்பானும் எதிர்த்தன. பிரிட்டனை ஆதரித்து, அந்த அணியில் இருந்த பிரிட்டன் அத னைச் சார்ந்த நாடுகளை, நேச நாடுகள் என்றும், ஜெர்மனி, ஜப்பான் போன்ற இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட நாடுகளை அச்சு நாடுகள் என்றும் அழைப்பது வாடிக்கை. பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து, இந்திய நாட்டிலுள்ள தேசிய காங்கிரஸ் ‘‘யுத்தத்துக்குப் பணம் கொடுக்காதீர்கள்; யுத்தத்திற்கு, பட்டாளத்துக்கு ஆள் எடுக்கிறது அரசு – அதில் சேராதீர்கள்’’ என்று தீர்மானம் போட்டார்கள்.
இரண்டாம் உலகப் போரில்
பிரிட்டனுக்கு ஆதரவு!
பிரிட்டனுக்கு ஆதரவு!
தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியும் இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனுக்கு ஆதரவாகவே நாம் இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, அதன்படியே நடந்து கொண்டன. காங்கிரஸ்காரர்கள் இதனை வைத்து, தந்தை பெரியார் அவர்களையும், அவர்தம் இயக்கத்தினரையும் ‘‘வெள்ளைக்காரர்களுக்கு வால்பிடிப்பவர்கள், பிரிட்டிஷ் தாசர்கள்’’ என்றெல்லாம் பிரச்சாரம் செய்வது உண்டு.
காங்கிரஸ்காரர்கள் மட்டும் அல்ல. தேசியத் தோழர் பி.ராமமூர்த்தி போன்றவர்கள் – கம்யூனிஸ்ட் வழியில் வந்தவர. ‘‘திராவிடமா, தேசியமா?’’ என்ற புத்தகம் எழுதினார். உண்மை வரலாறு என்ன என்பதில், நான் தெளிவாக ஒரு தொடர் சொற்பொழிவையே இதே பெரியார் திடலில் ஆற்றியிருக்கின்றோம். அதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஏதேதோ சொன்னார்கள். கம்யூனிஸ்ட்களும் சேர்ந்து, ‘‘நாங்கள் எல்லாம் தேசியவாதிகள்’’ என்று சொல்வார்கள். இன்றைக்கும் பாத்தீர்களேயானால், ‘‘சூப்பர் தேசியவாதிகள்’ என்பது மாதிரிதான் நடந்து காட்டுவார்கள்.
அதிலேயும் இரண்டு கம்யூனிஸ்ட்கள் இருக்கி றார்கள். ஒன்று, பார்ப்பன கம்யூனிஸ்டும் உண்டு; பார்ப்பன அல்லாத கம்யூனிஸ்டும் உண்டு. உயர்ஜாதிக்கா ரர்களுக்கு இன்றைக்கு வசதியாக இருக்கும்.
தவறாகப் பெரியாரைப் பற்றி அவர் மேலே பூசப்பட்ட தூசுகள் எல்லாம் தானாவே பறந்துவிடும்!
மேலும் அக்கட்டுரையில்,
‘‘பி.ராமமூர்த்தியை வைத்து தந்தை பெரியார் இயக்கத்தைக் கொச்சைப்படுத்த முயன்றனர். தந்தை பெரியார் அவர்களும், அவரது இயக்கத்தினரும் இரண்டாவது உலகப் போரின் போது, பிரிட்டிஷாரின் போர் முயற்சிக்கு ஆதரவாகவும், அச்சு நாடுகளான ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளின் முயற்சியை முறியடிப்பதிலும், முழு மூச்சாகவும் அன்றைய வெள்ளைக்கார அரசுக்கு ஒத்துழைப்பு தந்தனர்.’’
நூற்றுக்கு நூறு உண்மை. துணிச்சலோடு சொல்கிறோம். எங்களுடைய செயல்களை நியாயப்படுத்துவோம். எந்தக் காலத்திலும், நூறு ஆண்டுகளுக்குப் பிறகு வந்தாலும், அதனுடைய உண்மைகள் வெளியே வரும். தவறாகப் பெரி யாரைப் பற்றி அவர் மேலே பூசப்பட்ட தூசுகள் எல்லாம் தானாவே பறந்துவிடும்.
ஆரிய இனத்தின் மேன்மைக்காகவே
ஹிட்லரின் யுத்தம்!
ஹிட்லரின் யுத்தம்!
மேலும் அக்கட்டுரையில்,
‘‘விடுதலை நாளேடு குத்தகைக்கு விடப்பட்டது. ஏன் அந்த நிலை எடுத்தார் பெரியார்? எதற்காக ‘விடுதலை’ நாளேட்டை பிரிட்டிஷாருக்குக் குத்தகைக்கு விட்டார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?’’ வெறும் பண வருவாயைக் கருதி அல்ல.
ஜெர்மனியில் போர் துவக்கி நடத்தி, வெகுவேகமாக முன்னேறிய ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர். தான் ஜெர்மானியன் என்பதை விட, ஆரிய இனத்தின் பெருமைமிக்க பிரதிநிதி என்று பிரக டனப்படுத்தியதோடு, ஆரிய இனத்தின் மேன்மைக்கு பாடுபட்டவர்களை உலகின் நம்பர் ஒன் குடிமக்கள் ஆக்குவதே என்னுடைய நோக்கம். நமது நாடு பிடிக்கும் நோக்கம் என்று ஆணவத்துடன் பிரகடனப்படுத்தினார்.’’
‘‘நான் ஏன் பல நாடுகளை பிடிக்கிறேன் என்றால், எல்லா இடங்களிலும் ஆரிய இனம் பரவ வேண்டும். தூய்மையான ஆரிய இனம். அதுவும் கலப்புள்ள ஆரிய இனமாக இருக்கக்கூடாது’’ என்பதுதான் ஹிட்லரின் பிடிவாதம்.
இன்றைய ஆர்.எஸ்.எஸ். செய்ய முயற்சிப்பதை அன்றைக்கு சர்வாதிகாரி ஹிட்லர் செய்தார்
உங்களில் பல பேருக்கும் தெரியாத ஒரு செய்தி என்னவென்றால், ஜெர்மனியில் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்கி, ஹிட்லர் அரசு ஆணை பிறப்பித்தார். இன்றைய ஆர்.எஸ்.எஸ். செய்ய முயற்சிப்பதை அன்றைக்கு சர்வாதிகாரி ஹிட்லர் செய்தார். ஆர்.எஸ்.எஸ். யார்? ஹிட்லர் பாரம்பரியம் தான். எனவே, ஜனநாயகத்தைக் கவிழ்ப்பதற்காக மட்டும் இங்கே அது போன்று செய்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். ஆரியம் என்றால், மேன்மையானது என்று அர்த்தம் என்று வியாக்கியானம் சொல்வதற்கு இடம் இல்லை.
சமஸ்கிருத மொழியை இங்கேயே யாரும் பேசுவதில்லை. இங்கேயே செத்த மொழி அது. அப்படிப்பட்ட நிலையில், சமஸ்கிருதத்தைக் கட்டாய பாடம் என்று ஹிட்லர் அரசு ஆணை போட்டார் அன்றைக்கு.
ஆரிய இனம் கலப்பின்றி
பாதுகாக்கப்பட்டாக வேண்டுமாம்!
பாதுகாக்கப்பட்டாக வேண்டுமாம்!
மேலும் அந்தக் கட்டுரையில்,
‘‘நாசிசத்தின் உயர்நிலையே அதில் உள்ளதுதான். ஆரிய இனம் கலப்பின்றி பாதுகாக்கப்பட்டாக வேண்டும். ஆகவே, வேறு இனக்கலப்புள்ள திரு மணங்கள் நடைபெறவே கூடாது.’’
எப்படி இருக்கிறது பாருங்கள்; எவ்வளவுக் கொடுமையானது. இதை நுண்மையாகக் கவனித்தவர் தந்தை பெரியார்தான் – அவருடைய சிந்தனையினுடைய கூர்மைக்கு எடுத்துக்காட்டாகும்.
அப்படிப்பட்ட ஆரியம், ஹிட்லர் வந்திருந்தால் என்னாகும்? இப்பொழுது நாம் பயப்படுகிற விஷயம் நீண்ட நாள்களுக்கு முன்பே ஆயிருக்கும்.
அதை முன்னாலேயே உணர்ந்த, அந்த முன்னோக்கம். ‘‘The Prophet of the New Age’’ அது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது பாருங்கள்.
ஹிட்லரின் சின்னம் சுவஸ்திக்;
ஆர்.எஸ்.எஸ். சின்னமும் அதுதான்!
ஆர்.எஸ்.எஸ். சின்னமும் அதுதான்!
மேலும் அக்கட்டுரையில்,
‘‘ஆகவே, வேறு இனக்கலப்புள்ள திருமணங்கள் நடைபெறவே கூடாது என்றும், அவைகளுக்குத் தடைவிதித்தார். அவரது சின்னம் சுவஸ்திக். அந்தச் சின்னம்தான் இன்றைய இனவெறி ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் சின்னம், சமஸ்கிருத கலாச்சாரம் இவைதான் ஆர்.எஸ்.எஸ். பிரிட்டிஷ் அரசு கல்வி மற்றும் ஜாதி ஒழிந்த பல சீர்திருத்தங்கள் சதி என்ற என்ற உடன்கட்டை ஏறுதலை ஒழித்தல் போன்றவற்றை செய்ய ஆரிய, மனு தத்துவங்களுக்கு விரோதமான வகையில் செயல்பட்டதால், பார்ப்பனர்கள் தேசபக்தி என்ற பெயராலே, மனுபக்தி பார்ப்பன மேலாண்மையைப் பாதுகாக்கச் செய்தனர். ஜப்பான், பர்மாவைப் பிடித்துக் கல்கத்தா வரையில் வந்தார்.’’
(தொடரும்)
