அடுத்த 3 மாதங்களுக்குள் வட இந்தியப் பெருங்கடலில் 3 புயல்கள் ஏற்பட வாய்ப்பு!

இணையவழி கையெழுத்து இயக்கம்

பெங்களுரு, செப்.15- வருகிற அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்துக்குள் வட இந்திய பெருங்கடல் பகுதியில் 3 புயல்கள் உருவாக வாய்ப்புகள் இருப்பதாக விண்வெளி ஆய்வு மய்யம் எச்சரித்துள்ளது. வட இந்திய பெருங் கடல் பகுதியில் 2026 அக்டோபர் முதல் டிசம்பரில் 3 உயர் தீவிர வெப்பமண்டல புயல்கள் தாக்கக்கூடும் என இஸ்ரோ எச்சரித்துள்ளது.

இதனால், வடகிழக்கு பருவமழை காலமான இக்காலகட்டத்தில் 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புயலின் தாக்கம் 83 சதவிகிதம் தீவிரமாக இருக்கும்.

இந்தக் கணிப்புகளை ஆராய்வதற்காக, இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் 40 ஆண்டுகால கடலியல் மற்றும் வளிமண்டலத் தரவுகளை மதிப்பீடு செய்துள்ளனர். இந்த புயல் தீவிரமானது, கோடைப் பருவமழை ஏமாற்றத்தால் ஏற்பட்ட அசாதாரணமான கொந்தளிப்பான கடல் சூழலை எடுத்துக்காட்டுகிறது. புயலின் தீவிரத்தால், கிழக்கு மற்றும் மேற்குக் கடலோரப் பகுதிகளில் உள்ள பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுக்கு உடனடி எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பாதிக்கப்படக்கூடிய கடற்கரையை ஒட்டி வசிக்கும் மக்களைப் பாதுகாக்கவும், கடல்சார் சொத்துக்களைப் பத்திரப்படுத்தவும், இதுவரை அச்சுறுத்தலுக்கு உள்ளான கடல் சார் மண்டலங்களில் மீன்பிடித் தடைகளை அமல்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *