கழகக் களத்தில்…!

இணையவழி கையெழுத்து இயக்கம்

9.9.2026 புதன்கிழமை
கடலூர் மாவட்டக்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்

வடக்குத்து: மாலை 5 மணி *இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து *தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்) *பொருள்: தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்த நாள் விழா, தலைமைக் கழக செயற்குழுவில் ஏற்றிய தீர்மானங்களை நிறைவேற்றுதல், இயக்க வளர்ச்சிப் பணிகள் *விழைவு: கழகத் தோழர்களின் தவறாத வருகையும், ஆலோசனையும்.. *இவண்: சொ.தண்டபாணி (மாவட்டக் கழகத் தலைவர்), க.எழிலேந்தி (மாவட்டச் செயலாளர்)

மதுரை மாநகர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

மதுரை: மாலை 6 மணி *இடம்: மதுரை பெரியார் மய்யம் * பொருள்: தந்தை பெரியார் பிறந்த நாள் விழா. தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் செயல் படுத்த திட்டமிடல் * முக்கியத்துவம் வாய்ந்த இக்கலந்து ரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்  * வருகை விழையும்: அ.முருகானந்தம் மாவட்டத் தலைவர், இராலீ.சுரேஷ் மாவட்டச் செயலாளர்

12.9.2026 சனிக்கிழமை
திராவிடர் கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

(வடசென்னை, தென்சென்னை,
மேற்கு சென்னை, திருவொற்றியூர், தாம்பரம்,
ஆவடி, கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர்)

சென்னை: மாலை 4 மணி *இடம்: பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: த.மரகதமணி (திராவிட மகளிர் பாசறை தலைவர், வடசென்னை) *தலைமை: இறைவி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்) *முன்னிலை: வி.கே.ஆர்.பெரியார் செல்வி, சி.வெற்றிச்செல்வி, தங்க.தனலட்சுமி, பூவை செல்வி, உமா, பவானி, வளர்மதி, நாகவள்ளி, அருணா, இளவரசி, உத்ரா, யுவராணி, தேவி, அன்புச்செல்வி, பொன்னேரி செல்வி, அஜந்தா, ஜெயந்தி, நூர்ஜகான், புஷ்பலதா *பொருள்: கழகத் தலைமைச் செயற்குழு அறிவிப்பின்படி தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் – கூட்டங்கள் – கழக ஆக்கப் பணிகள் *கருத்துரை: சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர்), பா.மணியம்மை (மாநிலச் செயலாளர், திராவிட மகளிர் பாசறை), மு.பசும்பொன் (இயக்குநர், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்) *நன்றியுரை: அன்புச்செல்வி (திராவிட மகளிர் பாசறை மாவட்டத் தலைவர், ஆவடி) *குறிப்பு: திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறைத் தோழர்கள், பொறுபபாளர்கள் அவசியம் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்க வேண்டுகிறோம்.

செப்டம்பர் 17 – சமூகநீதி நாள்
தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கானப் பேச்சுப் போட்டி

தஞ்சாவூர்: காலை 10 மணி *இடம்: பொதுநலத் தொண்டர் ந.பூபதி நினைவுப் பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் *தலைப்பு: அறிவியல் மனப்பான்மையும் மூடநம்பிக்கையும் *முதல் பரிசு 3000, இரண்டாம் பரிசு ரூ.2000, மூன்றாம் பரிசு ரூ.1000 *குறிப்பு: போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உரிய கல்லூரி ஆவணத்துடன் கலந்து கொள்ள வேண்டும் *தொடர்புக்கு: 94437 84611, 93442 64982, 97867 88240 *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர் மாவட்டம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *