புதுடில்லி, செப்.8 ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நடைப் பயணம் மக்களிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்திய முக்கிய திருப்புமுனை என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, நாடு முழுவதும் சுமார் 145 நாள்கள் ‘பாரத ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரில் நடைப்பயணம் மேற்கொண்டார். இந்த யாத்திரை தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதன் 4-ஆம் ஆண்டு நிறைவு நாள் நேற்று (7.9.2026) காங்கிரஸ் கட்சியினரால் கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“சமகால இந்திய அரசியலில் இந்த நடைப் பயணம் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய நிகழ்வாகும். இது கன்னியாகுமரியில் தொடங் கப்பட்டு 4,080 கி.மீ. தூரத்துக்கு, 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 145 நாள்கள் நடைபெற்றது. தீவிரமடைந்துவரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், அதிகரித்துவரும் சமூகப் பிளவுகள், வளர்ந்துவரும் அரசியல் சர்வாதிகாரத்தால் கவ லைகொண்ட லட்சக்கணக்கான இந்தியர்களிடமிருந்து இந்த நடைப் பயணம் ஆதரவையும் ஊக் கத்தையும் பெற்றது. அரசமைப்புச் சட்டத்தின் கோட்பாடுகள், விதிகள், நடைமுறைகள் ஆகிய வற்றின் மீது ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவற்றின் திட்டமிட்ட தாக்கு தல்களுக்கு சித்தாந்த ரீதியில் சவால் அளிப்பதே இந்த நடைப் பயணத்தின் நோக்கமாகும்.
மக்களோடு உரையாடுவதற்காக மட்டும் இந்த நடைப் பயணம் நடத்தப்படவில்லை; மக்களின் பிரச்சினைகளைக் கேட்பதற்கே அந்த நடைப் பயணம் நடத்தப்பட்டது. புதிய நம்பிக்கையையும், புதிய ஆற்றலையும், புதிய உறுதி யையும் தூண்டிய திருப்பு முனை நிகழ்வான பாரத ஒற்றுமை நடைப் பயணத்தை இன்று நினைவுகூர்கிறோம்” என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட் டுள்ளார்.
