வரும் 8-ஆம் தேதி டில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 56-ஆவது கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் நீர் திறப்பு தொடர்பான முந்தைய உத்தரவுகளின் நிலை, காவிரியில் திறக்கப்பட்ட நீரின் அளவு, கருநாடக அணைகளின் நீர் இருப்பு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை அளவு குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. இதில், தமிழ்நாடு தரப்பில் காவிரியில் கூடுதல் நீர் திறந்துவிடக் கோரிக்கை வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
