சென்னையில் இரண்டாவது விமான நிலையம் பரிசீலனையில் செய்யூர், கும்மிடிப்பூண்டி!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 7– சென்னையில் 2ஆவது விமான நிலையம் அமைக்க பரந்தூர் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், செய்யூர் மற்றும் கும்மிடிப் பூண்டி ஆகிய பகுதிகளை அரசு தேர்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம் நூற்றாண்டை கடந்து இன்றும் செயல்பாட்டில் இருந்து வருகிறது. நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கடந்த சில ஆண்டுகளாக மீனம்பாக்கம் விமான நிலையம் இடநெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

இதன் காரணமாகப் புதிய பன்னாட்டு விமான நிலையம் கட்டுவதற்குக் கடந்த ஆட்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் இடம் தேர்வு செய்யப் பட்டது. அதற்கு ஒன்றிய அரசும் ஒப்புதல் அளித்தது. அதற்காக 90 சதவீதம் வரை நிலமும் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு பரந்தூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைத் தவெக தலைவர் ஜோசப் விஜய் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அதன்பின் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றார். இதையடுத்து, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவு கைவிடப்படுவதாக 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார். இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதேவேளையில் சென்னையில் 2ஆவது புதிய விமான நிலையம் அமைக்கும் இடங்களைத் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் (டிட்கோ) அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முதல் கட்டமாக ஆய்வு செய்து செய்யூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. எனினும் அந்த இடங்களில் விமான நிலையம் அமைப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர் பகுதியில் இருந்து 20 கி.மீ. தொலைவில்தான் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த வான்வெளிப் பரப்பு தாம்பரம் ஏர் போர்ஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் வருகிறது. இதுமட்டுமின்றி, கல்பாக்கத்தில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் அந்த வான்வெளி பரப்பு இருக்கிறது. எனவே அனுமதி கிடைப்பது சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது. மேலும் சென்னையில் இருந்து செய்யூர் 100 கி.மீ. தூரத்தில் இருப்பதால் பயணிகளுக்குப் போக்குவரத்து சிரமங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதேபோல், ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள சிறீ அரிகோட்டாவில் இருந்து சுமார் 50 கி.மீ. தூரத்தில் கும்மிடிப்பூண்டி உள்ளது. இதன் அருகில் பழவேற்காடு பாதுகாக்கப்பட்ட சூழலியல் மண்டலம் இருக்கிறது. எனவே, பெரிய அளவில் நிலம் கிடைப்பது இங்கும் சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது.

தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொள்ள ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாடு அரசு கடிதம் எழுதி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் விரிவான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அனுமதிகள் ஆகியற்றுக்குப் பின்னரே திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *