இராஜபாளையம் சிறுவர் நூலகத்தில் தமிழர் தலைவர்

6 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

இராஜபாளையம் தமிழ்நாடு அரசு பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் நூலகத்துக்கு, 20.08.2026 வியாழன் மாலை 7.00 மணிக்கு, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள், வருகை புரிந்தார்.

விருதுநகர் மாவட்ட கழக சார்பில், எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆவது ஆண்டு விழா, திறந்த வெளி மாநாடு, இராஜபாளையம்  சுதந்திரப் போராட்ட தியாகி காந்தி அரங்கசாமி ராஜா சிலைக்குப் பின்புறம்,  மதுரை ராஜா கடைத்தெருவில் மேடை அமைத்து நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொள்ள வந்தார். அந்த நிகழ்வுக்கு உரையாற்ற செல்வதற்கு முன்பு நம் நூலகத்துக்கு வருகை புரிந்தார்.

24.05.2026 ஞாயிறு நம் நூலகத்தில், விருதுநகர் மாவட்ட கழக சார்பில், மாணவர் சிந்தனை முகாம் நடைபெற்ற போது, விருதுநகர் மாவட்ட தலைவர் இல.திருப்பதி  மாநாடு நிகழ்வுக்கு வரும்போது திராவிடர் கழகத் தலைவர் நூலகத்துக்கு வருவார் என்று கூறி இருந் தார்கள்.  நூலகத்துக்கு நூல்கள் அவசியம் தருவதாகவும் கூறி இருந்தனர்.

24.05.2026 நூலகத்தில், ‘மந்திரமா தந்திரமா’ அறிவியல் விளக்க நிகழ்வு நடத்திய பெரியார் குமார் தோழர், 20.08.2026 வியாழன் மாலை நடந்த திறந்த வெளி மாநாட்டிலும் ‘மந்திரமா தந்திரமா’ அறிவியல் விளக்க நிகழ்வு நடத்திய பிறகு 6.30 மணிக்கு மேல் நம் நூலகத்துக்கு வந்தார். இன்னும் சற்று நேரத்தில் தலைவர் இங்கே வருவார் என்று கூறினார்.

திராவிடர் கழகம்

ஆசிரியர் வீரமணி அவர்கள் விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இல.திருப்பதி மற்றும் கழக உறுப்பினர்களுடன் வந்ததும், வரவேற்று நூலகத்தின் உள்ளே அழைத்து வந்ததும் சுறுசுறுப்பாக நூலகத்தில் உள்ள புத்தகங் களைப் பார்வையிட்டார்.

தோழமை முத்துலட்சுமி குழந்தை களுடன் வந்திருக்க, பார்வதி அம்மாள், ராஜம் அக்கா மட்டுமே இருந்தனர். தமிழ் நாடு அரசு பெண்கள் சிறுவர் நூலகம் என்பதில் மகிழ்ந்து குழந்தைகளை அருகில் வரவழைத்து பேசினார்.

இந்தியாவின் முதல் சித்திரக் கதை நூலகம் என்றதும் வாழ்த்திப் பேசினார்.

அப்போதே சித்திரக் கதை நூலகம் பார்க்க விரும்பினார்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு படிக்கும் பெண்கள் ஆறு மணிக்கு வீட்டுக்குச் சென்று விட்டனர். நம் நூலகம் இன்னும் முழு நேர நூலகம் ஆகவில்லை என்பதால், மாணவர்களும் அந்த நேரத்தில் இல்லை. இந்த தகவலை தெரிவித்ததும்,

விழாவுக்கு அவசரமாக செல்ல வேண்டி இருந்ததால் அடுத்த முறை நூலகத்துக்கு உரையாற்ற வருவேன் என்று உறுதியாக கூறினார்.

தலைவர் வீரமணி எழுதிய நூல்களை யும் பெரியார் குறித்த நூல்களையும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான நூல்களையும் நூலகத்துக்கு தர வேண்டுமென கூறி கோரிக்கை மனு அளித்ததும் அப்போது வாசித்து சிவப்பு பேனாவால் குறித்து,  நூலகத்துக்கு புத்தகங்களை அளிக்க மகிழ்வுடன் சம்மதமும் தெரிவித்தார்.

மேலும் அப்போது அவர் தம்முடன் கொணர்ந்த புத்தகங்கள் மேடைக்கு அருகில் இருப்பதால், இப்போதே விழா மேடைக்கு வந்து புத்தகங்களை வாங்கிக் கொள்ளுங்கள். ஊருக்குச் சென்ற பிறகு மற்ற நூல்களை அனுப்புகிறேன் என்று சொன்னார்.

நூலகத்தில் திராவிடர் கழகத் தலை வருக்கு புத்தகப் பரிசினை அளித்து  நன்றியைத் தெரிவித்து மகிழ்ந்தோம்.

நிகழ்வு என்று உடனே அவர் கிளம்பி விட்டதால் நூலக ஏட்டில் அவர் குறிப்பு இல்லை என்று நூலகர் அந்த நோட்டு புத்தகத்தையும் எடுத்து வந்து மேடையில் கொடுக்க அங்கேயே எழுதிக் கொடுத்தார்.

விழா மேடைக்குச் சென்று திராவிடர் கழகத் தலைவர் நூலகத்துக்கு அளித்த புத்தகக் கட்டினை வாங்கி வந்தோம்.

அவருடைய சுறுசுறுப்பும் வேகமும் கூரிய நோக்கும் நினைவாற்றலும் குழந்தைகளின் மீதான கரிசனமும் பெண்களின் முன்னேற்றம் குறித்த அக்கறையும் உடனடியாக செயல்படும் திறனும் இன்னும் இன்னும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்.

இந்த நிகழ்வினை சாத்தியப்படுத்த உடன் இருந்த  தோழமை பெரியார் குமார்  விருதுநகர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் இல. திருப்பதி மற்றும் தோழமைகளுக்கு நன்றி.

– மதுமிதா முகநூல் பதிவிலிருந்து….

ராஜபாளையம் தமிழ்நாடு அரசு பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் நூலகத்துக்கு, 20.08.2026 வியாழன் மாலை 7.00 மணிக்கு, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள், வருகை புரிந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *