டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* சிபிஎம் -விஹெச்பி விவகாரம்: வங்காளத்தில் துர்கா பூஜை பந்தல்களில் அசைவ உணவு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற விஎச்பி-யின் கோரிக்கையை சிபிஎம் கடுமையாக எதிர்த்துள்ளது; உணவு தேர்வில் தலையிடக் கூடாது என வலியுறுத்தியுள்ளது.
* ஆர்.எஸ்.எஸ். தலைவர் உபன்யாசம்:ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், அமெரிக்காவில் இந்தியர்கள் குறித்து வெளியான கருத்துகளைச் சுட்டிக்காட்டி, இந்தியாவில் இந்துக்கள்–முஸ்லிம்கள் இடையே பிரிவினையை தூண்டும் வகையில் பேசக்கூடாது என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
* உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான்:மாணவர்கள் கேள்வி கேட்பதற்கும் மாறுபட்ட கருத்துகளை வெளிப்படுத்துவதற்கும் தண்டனை வழங்குவது அரசியலமைப்புக்கு எதிரானது; அது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகும். ஜனநாயகம் குறித்து: பலதரப்பட்ட கருத்துகளை மதித்து, சுதந்திரம், சமத்துவம், வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளும் பண்பை பல்கலைக்கழகங்கள் வளர்க்க வேண்டும்; கேள்வி கேட்பது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாகும்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘இரட்டை வேடம்’: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் நாட்டில் பன்முகத்தன்மையை சகித்துக் கொள்ள முடியாதவர் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன; காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது, அவர் “பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்” எனக் கூறினார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தொகுதி மறுவரையறைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு: மக்கள் தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட தொகுதி மறுவரையறை, பழங்குடியினரின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் எனக் கூறி, பேரணியின் முக்கிய கோரிக்கைக்கு சோரன் ஆதரவு தெரிவித்தார்.இருப்பினும், ஜார்கண்ட் பழங்குடியினர் ஒற்றுமைப் பேரணியில் முதலமைச்சர் சோரன் பங்கேற்கவில்லை.
* இதுதான் குஜராத் மாடல்? குஜராத்தில் 5 ஆண்டு களாக சிறுபான்மையினர் நலத் திட்டத்திற்கு நிதி இல்லை: PMJVK தகவல் 2021–2022 முதல் 2025–2026 வரை அய்ந்து ஆண்டுகளிலும் குஜராத்திற்கு பிரதமரின் ஜன் விகாஸ் காரியக்ரம் (PMJVK) நிதி எதுவும் விடுவிக்கப்படவில்லை; இதேவேளை, திட்டம் தொடங்கியதிலிருந்து 82 திட்ட அலகுகள் நிறைவு பெற்றதாக பட்டியலிடப்பட்டுள்ளன.
தி இந்து:
* என்.இ.பி. (NEP) 2020க்குப் பிறகு சுமார் 1 லட்சம் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன: மாணிக் சர்க்கார் அதிர்ச்சித் தகவல்: தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020 அமல்படுத்தப்பட்டதிலிருந்து நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக திரிபுரா முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் தெரிவித்துள்ளார்.
* ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர்கள் விலகுவார்கள்: 2029 மக்களவைத் தேர்தலில் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் நிலைப்பாட்டை தவெக தொடர்ந்தால், ராகுல் காந்தியை ஏற்கா விட்டால் தானும் மற்றொரு காங்கிரஸ் அமைச்சரும் உடனடியாக பதவி விலகுவோம் என அமைச்சர் எஸ். ராஜேஷ்குமார் அதிரடிப் பேட்டி.
தி டெலிகிராப்:
* இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்கள்: பா.ஜ.க.வின் ‘திசைதிருப்பும் முயற்சி’ என ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி அமைப்புகள் குற்றச்சாட்டு: இட ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய சமூகநீதிப் பாதுகாப்பு எனக் கூறிய கோ. கருணாநிதி, ஜாதி அமைப்பை எதிர்க்கத் துணிவில்லாதவர்களே இடஒதுக்கீட்டை எதிர்ப்பதாக கண்டனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ரூ.100 பணமோசடியில் ரூ.1 மட்டுமே அதிகாரிகளால் மீட்கப்படுகிறது: தலைமை நீதிபதி சூர்யகாந்த் விமர்சனம்: பொருளாதாரக் குற்றவாளிகளின் நுட்பமான செயல்பாடுகள் மற்றும் நாடுகளிடையேயான ஒத்துழைப்பின்மை காரணமாக, மோசடி செய்யப்பட்ட ஒவ்வொரு ரூ.100-க்கும் ரூ.1 மட்டுமே அதிகாரிகளால் மீட்கப்படுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார்.
– குடந்தை கருணா
