கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 17.8.2026

சிறப்பு புத்தக சலுகைகள்

டெக்கான் கிரானிக்கல், சென்னை :

* உ.பி., உட்கட்சி கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு எதிராக கடும் பின்னடைவு: உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக அதிருப்தி அதிகரித்து வருவதாகவும், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் செல்வாக்கும் குறைந்துள்ளதாகவும் கட்சியின் உட்கட்சி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுமார் 80 தொகுதிகளில் தற்போதைய எம்.எல்.ஏ.க்களுக்கு பதிலாக புதிய வேட்பாளர்களை நிறுத்த பா.ஜ.க. திட்டமிட்டு வருவதாக தகவல்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* யு.ஜி.சி. – நெட் (UGC-NET) மறுதேர்வு நடத்த என்.டி.ஏ. உத்தரவு: கேள்வித்தாள் குளறுபடிகள் காரணமாக யு.ஜி.சி. – நெட் ஜூன் 2026 தேர்வில் ஆங்கிலம், வணிகவியல், சமூகவியல் ஆகிய 3 பாடங்களுக்கு மறுதேர்வு நடத்த தேசிய தேர்வு முகமை உத்தரவு. மீதமுள்ள 84 பாடங்களின் தேர்வுகள் பாதிக்கப்படாது என்றும், மறுதேர்வு செப்டம்பர் 8, 9, 10 தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* ‘மோடி ஆட்சியை எதிர்க்கும் இளைஞர்களுக்கு’ ராகுல் பாராட்டு: மாணவர்கள் போராடும் துணிச்சலை பாராட்டிய ராகுல் காந்தி, தேர்வு தாள் கசிவு மற்றும் காவல்துறை அத்துமீறலுக்கு எதிராக இளைஞர்கள் குரல் எழுப்புவது ஜனநாயகத்திற்கு முக்கியமானது என்றார். “இளைஞர்களின் குரலை ஒடுக்க முடியாது” எனக் கூறிய அவர், மேலும் பல மாணவர்கள் போராட்டத்தில் இணைந்ததை வரவேற்றார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்: 

* இளைஞர் போராட்டங்கள் தொடர்பான 3 கேள்வித் தொகுப்புகளை மக்களவை நிராகரித்தது என சி.ஜே.பி. குற்றச்சாட்டு: திமுக மக்களவை உறுப்பினர் மாதேஸ்வரன் வி.எஸ். சமர்ப்பித்த இளைஞர் போராட்டங்கள் தொடர்பான 3 கேள்வித் தொகுப்புகள் மக்களவையில் அனுமதிக்கப்படவில்லை என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி  தெரிவித்துள்ளது.  நீட்-யு.ஜி.2026 கட்டணத் திருப்பிச் செலுத்துதல், மாணவர் நலன், போராட்ட மாணவர்களுடன் அரசின் பேச்சுவார்த்தை, வினாத்தாள் கசிவு உள்ளிட்டவை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தன என திப்கே பேட்டி.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 

* பெண்கள் இடஒதுக்கீடு: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்: 2029 தேர்தலுக்காக மக்களவையின் தற்போதைய உறுப்பினர் எண்ணிக்கையின் அடிப்படை யிலேயே பெண்கள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

* செங்கோட்டையில் இருந்து “போதனை” செய்வதை விட, பெண்கள் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்.

தி இந்து:

* ராமர் கோயில் நன்கொடை மோசடி: பா.ஜ.க.வை தாக்கிய அகிலேஷ் செயற்கை நுண்ணறிவு காட்சிப் பதிவு (AI): அயோத்தி ராமன் கோயில் நன்கொடையில் முறைகேடு நடந்ததாக கூறி, பா.ஜ.க.வை விமர்சித்து அகிலேஷ் யாதவ் AI மூலம் உருவாக்கப்பட்ட காட்சிப்பதிவை வெளியிட்டார். அதில் “திருடப்பட்ட பணத்தை” மக்கள் ஏற்க மறுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* பீகார் தேர்வு முறையில் ‘முழுமையான சரிவு’: தேஜஸ்வி போராட்ட அறிவிப்பு: பீகாரில் தொடரும் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறையின் சீர்குலைவை கண்டித்து ஆகஸ்ட் 19 அன்று ராஜ்பவனை நோக்கி பேரணி நடத்துவதாக தேஜஸ்வி அறிவித்தார். ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் தொடர்ந்து வினாத்தாள்கள் கசிவதாகவும், கல்வித் துறையில் பீகார் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *