கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 10.7.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* கட்சித் தாவல் சட்டத்தை வளைக்கும் பாஜக: மே.வங்கத்தில் தொடரும் கட்சி தாவல் திரிணாமூல் மேனாள் எம்பிக்கள் 3 பேர் பாஜகவில் அய்க்கியம்: மீண்டும் மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிப்பு.

* ஷிண்டேவுடன் சரத்பவார் திடீர் சந்திப்பு – உத்தவ் தாக்கரே சிவசேனா, காங்கிரஸ் கலக்கம். இது குறித்து சிவசேனா (உத்தவ்) எம்.பி.சஞ்சய் ராவத் கூறும்போது, “பவார்-ஷிண்டே சந்திப்பால் பல ஊகங்கள் எழுந்துள்ளன. மேலும் இது பவார் கட்சி மீது வைத்துள்ள நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது. கட்சித் தலைவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை கீழே இறக்கியுள்ளது” என விமர்சனம்.

* பாலியல் முறைகேடு வழக்கு: டிரம்ப் $5.8 மில்லியன் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு. அமெரிக்க எழுத்தாளர் இ. ஜீன் கரோல் தொடர்ந்த பாலியல் முறைகேடு மற்றும் அவதூறு வழக்கில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் $5.8 மில்லியன் (சுமார் ₹50 கோடி) இழப்பீட்டை பெற கரோலுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மோடி அரசில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தரின் உதவியாளர்கள் நீக்கப்பட்டதன் பின்னணியில் நிர்வாக முறைகேடுகள் இருப்பதாக அவர் கூறினார். ராஜஸ்தானின் சரிஸ்கா புலிகள் காப்பகம் மற்றும் அரவல்லி மலை பகுதிகளைச் சார்ந்த சுற்றுச்சூழல் முடிவுகளில் முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* நாடாளுமன்றக் குழு நீட் தேர்வு மற்றும் சுகாதார ஒழுங்குமுறை அமைப்புகளை ஆய்வு செய்ய உள்ளது. ஜூலை 16 அன்று சமாஜ்வாதி கட்சி எம்.பி. ராம் கோபால் தலைமையிலான நாடாளுமன்றக் குழு,  நீட் தேர்வு நடத்தும் நடைமுறை, தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) செயல்பாடு மற்றும் சுகாதார அமைச்சகத்தின் ஒழுங்குமுறை அமைப்புகளின் திறன் குறித்து ஆய்வு செய்ய உள்ளது. ஜூலை 15 அன்று அரசு மற்றும் தனியார்த் துறைகளில் சுகாதார சேவைகளின் அணுகல் மற்றும் செலவுத்  திறன் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது.

* கேரள பா.ஜ.க.வில் தேர்தல் நிதி முறைகேடு புகார்: கேரள பா.ஜ.க.வில் தேர்தல் நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள புகார் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கட்சியின் கணக்குகளை முழுமையாக தணிக்கை செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் பல மூத்த தலைவர்கள் விசாரணை வளையத்திற்குள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தி இந்து:

* புதிய கல்விக் கொள்கை மசோதாவுக்கு எதிர்ப்பு – ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வி.பி.எஸ்.ஏ. (VBSA) மசோதாவில் அதிகாரங்கள் அதிகமாக ஒன்றிய அரசிடம் குவிக்கப்படுவதாக ம.பி., ஆந்திரா, மேகாலயா ஆகிய பாஜக ஆதரவு (NDA) ஆளும் சில மாநிலங்களும் பல்கலைக்கழகங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பல்கலைக்கழகங்களின் தன்னாட்சிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற கவலை எழுந்துள்ளது.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *