வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவானது!

சிறப்பு புத்தக சலுகைகள்

கொல்கத்தா, ஆக.16 வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால் மேற்குவங்கம்- ஒடிசா பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற வாய்ப்புள்ள தாக வானிலை ஆய்வு மய்யம் தெரி வித்துள்ளது.

கடல் கொந்தளிப்புடன் காணப் படும் என்பதால், ஆகஸ்டு 18 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட் டுள்ளது.

தமிழ்நாடு கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு  காரணமாக 16.8.2026 முதல் 21 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் ஏனைய ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

இந்த நிலையில், வடமேற்கு வங்கக் கடல் மற்றும் மேற்கு வங்கம் – வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மய்யம் அறிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து 24 மணி நேரத்தில் வலுவடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக பருவமழை தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் 3 நாள்களுக்கு மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது எனவும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மய்யம் அறிவுறுத்தி உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *