சென்னை மற்றும் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மய்யம் தகவல்!

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 16- தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 17 மற்றும் ஆகஸ்ட் 19 ஆகிய தேதிகளில் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் எச்சரித் துள்ளது.

வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக இந்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்ய
வாய்ப்புள்ள மாவட்டங்கள்

ஆகஸ்ட் 17 (திங்கள்): திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். ஆகஸ்ட் 19 (செவ்வாய்): சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகப் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை பெய்யும் சமயங்களில் ஒருசில இடங்களில் பலத்த இடி, மின்னல் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *