தமிழ்நாட்டிலிருந்து கடல் கடந்து சென்றவர்கள் உடல் உழைப்பால், தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எல்லாம், கடவுள், வேதம், சாஸ்திரம், புராணம் என்கிற விசயத்திற்காக அழுக்குப்படாமல்
ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற தமிழ்நாட்டில் இருந்து வருகின்ற பார்ப்பனர்களிடம் கொடுக்கின்றார்களே!
அவர்களுக்குத் தெளிவை ஏற்படுத்தவேண்டும் என்பதே
பெரியாரின், மலேசியப் பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது!
ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற தமிழ்நாட்டில் இருந்து வருகின்ற பார்ப்பனர்களிடம் கொடுக்கின்றார்களே!
அவர்களுக்குத் தெளிவை ஏற்படுத்தவேண்டும் என்பதே
பெரியாரின், மலேசியப் பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது!

சிங்கப்பூர், ஆக.16 தமிழ்நாட்டிலிருந்து கடல் கடந்து சென்றவர்கள் உடல் உழைப்பால், தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எல்லாம், கடவுள், வேதம், சாஸ்திரம், புராணம் என்கிற விஷயத்திற்காக அழுக்குப்படாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற பார்ப்பனர்கள், தமிழ்நாட்டில் இருந்து வருகின்ற பார்ப்பனர்களிடம் கொடுக்கின்றார்களே என்பதைப் பார்த்து, அவர்களுக்குச் சில தெளிவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கமெல்லாம், பெரியாருடைய பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. ஆக இந்த நோக்கத்தோடு அவருடைய பயணம் அமைந்துள்ளது என்றார் முனைவர் முனைவர் சுபாஷினி அவர்கள்.
கடந்த 18.7.2026 அன்று சிங்கப்பூரில் ‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவினரின் 359 ஆவது நிகழ்வாக ‘‘மலேசியா சிங்கப்பூரில் பெரியார்’’ புத்தகத்தின் ஆய்வுரையினை ஜெர்மனியிலிருந்து காணொலிமூலம், முனைவர் சுபாஷினி அவர்கள் நிகழ்த்தினார்.
அவ்வாய்வுரை வருமாறு::
‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவின்
359 ஆவது நிகழ்வு
359 ஆவது நிகழ்வு
ஒருங்கிணைப்பாளர் உமா: அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்!
நமது வாருங்கள் படிப்போம் குழுவின் 359 ஆவது நிகழ்விற்கு உங்கள் அனைவரையும் அன்போடு வர வேற்கின்றோம்.
‘மலேசியா சிங்கப்பூரில் பெரியார்’ புத்தக ஆய்வுரை – இன்றைய திறனாய்வாளர் முனைவர் சுபாஷினி அவர்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பின், நமது குழுவில் மீண்டும் இன்று இணைந்திருக்கின்றார்!
நமது குழுவின் நிகழ்வுகளைத் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு சுபாஷினி அவர்கள் குறித்த அறிமுகம் தேவையில்லை. ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியாக நமது குழுவில் திறனாய்வு செய்து வருகின்றார். அதிலும் இன்று முக்கியமாக நமது 50 ஆவது திறனாய்வின் போது ‘திரவிடியன் மூவ்மெண்ட்’ என்ற நூலை அறிமுகம் செய்த ஆசிரியர் வீரமணி அய்யா அவர்கள் 50 ஆவது நிகழ்வில் பங்கேற்றார். 2021 ஆம் ஆண்டு, மே 15 – ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின், நமது குழுவில் மீண்டும் இன்று இணைந்திருக்கின்றார்.
அய்யா அவர்களுக்கு முதற்கண் நமது குழுவின் சார்பாக வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இப்படி ஒரு வாய்ப்பை நல்கிய சுபாஷினி அவர்களுக்கும் நன்றி!
முனைவர் சுபாஷினிபற்றி….
சுபாஷினி அவர்கள் குறித்த ஒரு சிறு அறிமுகம், சுபாஷினி அவர்கள், பள்ளிக் கல்வியை பினாங்கிலும், கணினி இயந்திரத் துறையில் உயர்கல்வியை ஆஸ்தி ரேலியா மற்றும் ஜெர்மனியிலும், கணினி வர்த்தகத் துறையில் முனைவர் பட்ட ஆய்வை இங்கிலாந்திலும் முடித்தவர்.
இப்போது டிஎக்சி டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தின் அய்ரோப்பிய பிராந்தியத்திற்கான பொறியாளராக பணியாற்றி வருகின்றார். தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தோற்றுநர்களில் ஒருவராகவும், அதன் தலைவராகவும் செயல்பட்டு வருகின்றார்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் இணைய கல்விக் கழகமான கடிகை அமைப்பின் இயக்குநர், தமிழ்நாடு மற்றும் உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள கல்விக் கழகங்களில் 800–க்கும் மேற்பட்ட வரலாற்றுப் பாதுகாப்பு உரைகள் நிகழ்த்தி இருக்கின்றார். உலகளாவிய அளவில் ஏறக்குறைய 1,400 அருங்காட்சியாளங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளதோடு, அவை பற்றிய 250–க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதி இருக்கின்றார்.
தமிழ்நாடு அரசின் தமிழ் இணைய கல்விக் கழகத்தின் அய்ரோப்பிய பொறுப்பாளராக, ஆறு அய்ரோப்பிய ஆய்வு மாணவர்களை வழிநடத்தி இருக்கின்றார். தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர்நாள் விழாக் குழு உறுப்பினராகவும் அங்கம் வைக்கின்றார். நிறைய நூல்கள் எழுதியிருக்கின்றார். அவற்றுள் சில, உ.வே.சா.வுடன் ஓர் உலா! ஜெர்மானிய தமிழியல், உலக அருங்காட்சியங்களுடன் ஒரு பயணம், கீழடி வைகை நாகரீகம், என் வாசிப்பில் சில பக்கங்கள், நூல்களின் மதிப்பாய்வுகள், சித்திரக் கதைகள், வீரமாமுனிவர், அறியப்பட வேண்டிய தமிழ்நாடு, ராஜராஜனின் கொடை, ஆனைமங்கலம் செப்பேடுகள் குறித்த ஒரு நூல், வரலாற்று ஆய்வில் களப்பணிகள், மக்கள் வரலாறு தொடக்கமும்– தொடர்ச்சியும் ஆகியன இவரது படைப்புகளில் சில.
இவர் பெற்ற விருதுகளில் சில, வட அமெரிக்காவின் பெட்னா விருது, வட அமெரிக்கா வாசிங்டன் தமிழ்ச் சங்க விருது, தமிழ்நாடு அரசின் 2016 ஆம் ஆண்டிற்கான மொழியியல் விருது, தமிழ்நாடு அரசின் சிறந்த ஆய்வு நூலுக்கான விருது, முத்தமிழ் சான்றோர் விருது – மலேசியா பாரதி மன்றம் வழங்கிய விருது.
இவரது செயல்பாடுகள், குறிப்பிடத்தக்க செயல் பாடுகள் – இங்கிலாந்தில் உள்ள பிரித்தானிய நூலகத்துடன் இணைந்து அரிய தமிழ் நூல்களின் மின்னாக்க செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். ஜெர்மனி குட்டன்பர்க் மாநிலத்தில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் இரண்டு அய்ம்பொன் திருவள்ளுவர் சிலைகளை நிறுவும் பணியை நிறைவேற்றி இருக்கின்றார். மலாயா வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையில் வரலாற்றுக் காணொலிகள் பதிவைச் செய்தவர். மலாயாவில் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் இதழியல் மற்றும் பத்திரிகை முயற்சிகளைப் பற்றிய ஆய்வுகளைச் செயல்படுத்தி வருகிறவர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் அருங்காட்சியகங்கள் பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் கல்வெட்டுப் பயிற்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரு கின்றார்.
இப்போது முனைவர் சுபாஷினி அவர்களின் திறனாய்வு!
முனைவர் சுபாஷினி: அனைவருக்கும் இனிய வணக்கம்!
இந்த நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். குறிப்பாக இன்றைக்கு ஆசிரியர் கி.வீரமணி அய்யா வந்திருக்கின்றார்கள், அவர்களுக்கு முதலில் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதோடு இந்த நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக நிகழ்த்திக் கொண்டு வருகின்ற ‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவின் பொறுப்பாளர் பேராசி ரியர் உமா அவர்களுக்கும், தோழர் ஒளிவண்ணன் மற்றும் இந்தக் குழுவைச் சேர்ந்த பலருக்கும் அரசு செல்லையா அண்ணன் வந்திருக்கிறார்கள், எனது கணவர் கவுதம்சன்னா, குமரேசன் அய்யா மற்றும் நண்பர்கள் பலரும் வந்திருக்கிறார்கள். வந்திருக்கின்ற அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அயல்நாடுகளைப் பொறுத்தவரையில் பெரியாரின் பங்களிப்பு எப்படி இருக்கின்றது, இருந்தது?
இந்தப் புத்தகத்தை நான் வாங்கி ஓரிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அவ்வப்போது படித்துக் கொண்டிருந்தாலும் கூட, திடீரென்று இந்த ஆண்டு எனக்குத் தோன்றியது. நாம் மலேசியா வரலாற்றைப் பற்றி நிறைய எழுதிக் கொண்டிருக்கின்றோம். அதி லும் குறிப்பாக, பெரியார் பற்றி தமிழ்நாட்டில் அனை வரும் நிறைய பேசுகின்றார்கள். உலகத்தில் பலரும் பேசுகின்றார்கள். மலேசியா, சிங்கப்பூரில் அவர் வந்த பொழுது, அங்கு நிகழ்ந்த விஷயங்கள், அது என்ன மாதிரியான ஒரு வரலாற்று தொடர்ச்சியை அங்கு ஏற்படுத்தியது என்பதைப் பற்றி நாம் அதிகம் பேசுகின்றோமா? என்ற ஒரு கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், பெரியார் அவர்களைப் பற்றி பேசும்பொழுது நமது பார்வை எல்லாம், தமிழ்நாட்டை ஒட்டியதாகவும், இந்தியா என்ற பார்வையாகவும் இருக்கின்றது. அயல்நாடுகளைப் பொறுத்தவரையில் அவரது பங்களிப்பு எப்படி இருக்கின்றது, இருந்தது. அது ஏற்படுத்திய வரலாற்று மாற்றங்கள் என்ன என்பதைப் பற்றி தமிழ்நாட்டில் இருப்பவர்கள் தெரிந்திருக்கின்றார்களா? அதிகமாகப் பேசுகின்றார்களா? என்று பார்த்தால், இல்லை என்ப தாகத்தான் இருந்தது.
மலேசியாவைப்பற்றி
நன்கு அறிந்தவர் என்ற முறையில்…
நன்கு அறிந்தவர் என்ற முறையில்…
அடிப்படையில், மலேசியாவில் பிறந்த, ஒரு தமிழ்நாட்டு பெற்றோருக்குப் பிறந்த ஒரு பெண்ணாக இருப்பதால், எனக்கு இதைப் பற்றி ஓரளவு பேச வேண்டும் என்று தோன்றியது. அதுவும் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் பேசுவதை விட, மலேசியாவில் பிறந்து வளர்ந்த நான் பேசும் பொழுது, அந்த நாட்டின் வளர்ச்சி யைப் பார்த்து, அங்கேயே படித்து வளர்ந்து, பிறகு அந்த ஊர்களின் பெயரை அறிந்த எனக்கு அதைப் பற்றி பேசும் பொழுது இன்னும் பல தெளிவுகளையும், கூடுதலாக சில விஷயங்களையும், கூறக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது என்ற ஒரு எண்ணம் எனக்கு மனதில் தோன்றியதால், இந்த நூலை நாம் எடுத்துக்கொண்டு பேசுவோம் என்று நான் முடிவு செய்தேன்.
ஒரு வரலாற்றுப் பயணமாக அமையும்!
எப்போதும் உரையாற்ற வரும்பொழுது நான் ஸ்லைடுகளைத் தயாரித்துக் கொண்டு வருவேன். ஏனென்றால் நிறைய தகவல்களை நாம் கூடுதலாகச் சொல்லும்பொழுது, நான் மட்டுமே என் முகத்தை காட்டிக்கொண்டு பேசிக்கொண்டிருப்பதை விட, அதிகமான தகவல்களைக் கூடுதல் தகவல்களை நாம் வழங்க வேண்டும் என்பது முக்கியம். அதன் வழியாக இது ஒரு வரலாற்றுப் பயணமாக நிச்சயமாக இந்த உரை அமையும் என்று தான் நான் நினைக்கின்றேன்.
‘‘மலேசியா சிங்கப்பூரில் பெரியார்!’’
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் வெளியீடு!
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் வெளியீடு!
முதலில் இந்த நூலை பற்றிச் சொல்லிவிடுவோம். இந்த நூலின் பெயர் ‘‘மலேசியா சிங்கப்பூரில் பெரியார்!’’ இதை எழுதிய தொகுப்பாசிரியர் கி. வீரமணி அவர்கள். இது முதல் பதிப்பாக செப்டம்பர் 1989 இல் வெளிவருகின்றது. பிறகு என்னிடம் இருப்பது விரிவாக்கப்பட்ட நான்காம் பதிப்பு. அடுத்த பதிப்புகள் வந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. இதன் விலை நன்கொடை என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். ரூ.250. பக்கங்கள் 400. ஆகக் குறைந்த விலையில் தான் இதை பதிப்பித்திருக்கின்றார்கள். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் வெளியீடாக இந்த நூல் வந்திருக்கின்றது.
39 அத்தியாயங்களில் தகவல்கள்!
ஏறக்குறைய 400 பக்கங்கள் இருக்கின்றன. முதல் பகுதிகளில் எல்லாமே டெக்ஸ்ட் இருக்கின்றது. கடைசியில் ஓர் ஆறு, 12 பக்கங்களில் புகைப்படங்கள் இருக்கின்றன. அந்தக் காலத்தில் உங்களுக்குத் தெரியும் எல்லாம் கருப்பு – வெள்ளை புகைப்படங்கள் தான். ஆக, அந்த வகையில் கருப்பு – வெள்ளை புகைப்படங்களாக நிறைய படங்கள் இதில் இணைக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்க்கின்றோம். இதில் எத்தனைப் பகுதிகள் என்று பார்த்தால், ஏழு பகுதிகளாக தொகுப்பாசிரியர் இதனை பிரித்திருக்கின்றார் இந்த நூலை. அதில் பகுதி ஒன்றில், தந்தை பெரியாரின் முதல் மலேசியப் பயணம் – ‘‘மலேயா பயணம் என்ற சுற்றுப்பயணம்’’ என்ற தலைப்பில் ஏறக்குறைய 39 அத்தியாயங்களில் தகவல்கள் வருகின்றன. அதன் பிறகு தந்தை பெரியா ரின் இரண்டாம் மலாயா சுற்றுப்பயணம். அது பகுதி இரண்டில் வருகின்றது. ஆக, இரண்டு முறை அவர் வந்திருக்கின்றார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதைப் பற்றிய தகவல்கள் வருகின்றன. பிறகு பகுதி மூன்றில், பர்மா, மலேசியா, சிங்கப்பூர் பயணம் பற்றி தந்தை பெரியார் அவர்கள் அந்தக் காலகட்டத்தில் அங்கே வழங்கிய உரைகள் இதில் வருகின்றன. அதோடு கூடுதலாக இணைப்புகளும் வருகின்றன. பிறகு பகுதி நான்கில் மலேசியாவில் சுயமரியாதைக் கொள்கைகளும், சுயமரியாதை இயக்கமும் – மலேசி யாவில் இயங்கிய இந்தக் கொள்கைகள் அல்லது இயக்கங்கள் அதைப் பற்றிய தகவல்களை எல்லாம் இதில் வழங்கி இருக்கின்றார்.
எப்படி, மலேசியா தோழர்கள் ‘குடிஅரசு’ பத்திரிகைக்கு சந்தாதாரர்களாக ஆனார்கள்?
பகுதி அய்ந்தில் மலேசியாவில் நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் விழாக்கள். ஆக, அது டிசம்பர் மாதத்தில் இல்லை என்றாலும் கூட, அவர் டிசம்பர் மாதத்தில் அந்தப் பயணங்களை வைத்திருந்தார் என்றாலும் கூட, மலேசியாவில் அவர் பிறந்தநாளைக் கொண்டாடிய விஷயங்களைப் பற்றி இங்கே தகவல்களை அவர்கள் வழங்கி இருக்கின்றார்கள். அடுத்ததாக பகுதி எட்டு, சுயமரியாதை இயக்க ஏடுகளுக்கும், பிரச்சாரத்திற்கும் மலேயா தோழர்களின் உதவி. இது ஒரு முக்கியமான பகுதியாக நான் கருதுகின்றேன். எப்படி, மலேசியா தோழர்கள் ‘குடிஅரசு’ பத்திரிகைக்கு ஒரு சந்தாதாரர்களாக ஆனார்கள்? பிறகு எப்படி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார்கள்? போன்ற செய்திகள் எல்லாம் இதில் வருகின்றன.
இறுதியாக பகுதி ஏழு, ‘‘தென்கிழக்கு ஆசியாவில் பெரியார் குரல்’’ என்று கி.வீரமணி அவர்கள் அவர்கள் எழுதிய, அவருடைய பயணங்கள் பற்றிய சில செய்திகளும், அந்தச் சிறிய பகுதியாக ஒன்று வரு கின்றது. இறுதியாக ‘‘பெரியாருடன் முதல் தொடர்பு’’ என்ற தலைப்பில், கோ.சாரங்கபாணி அவர்களுடைய விஷயம் ஒன்று வருகின்றது. ஆக இதற்குள் அந்த 400 பக்கங்களை கொண்ட விஷயங்கள், பல்வேறு தகவல்கள் இந்த நூலில் இருக்கின்றன.
நான் அடுத்து வருகின்ற ஏறக்குறைய நமக்கு இருக்கின்ற நேரத்திற்குள், ஒரு 40 நிமிடங்களுக்குள் நான் முடிந்த அளவிற்கு முதல் இரண்டு பகுதிகளைப் பற்றி மட்டுமே, அதாவது பெரியாரின் இரண்டு பயணங்களைப் பற்றி மட்டுமே நான் பேசலாம் என்று நினைக்கின்றேன். அதற்காக நான் ஒரு ‘ஸ்லைட்’ தயாரித்திருக்கின்றேன். அதை நான் ‘பிரசென்ட்’ பண்றேன் முதலில்.
பெரியார் அவர்கள் பேப்பர் படிக்கிற மாதிரி இருக்கும்.
சிங்கப்பூரில் பெரியார் இருந்த காலகட்டத்தில், ‘தமிழ்முரசு’ பத்திரிகையை வாசித்த பொழுது எடுக்கப்பட்ட ஒளிப்படம்!
நான் இந்த முதல் பகுதியைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கும் உங்களுக்கு. ஏன், நான் ‘குடிஅரசு’ படத்தைப் போடாமல், ‘தமிழ் முரசு’ பத்திரிகையை பெரியார் அவர்கள் கையில் வைத்திருக்கிற மாதிரி நான் போட்டிருக்கின்றேன் என்றால், இது சிங்கையில் இருந்து வெளிவந்த பத்திரிகை. ஆகவே, மலேசியா – சிங்கை மலாயா என்ற ஒரு ஒரு நாட்டிற்குள் இருந்த ஒரு காலகட்டம் – காலனித்துவ ஆட்சி காலத்தில். பெரியார் அவர்கள் இந்தப் பத்திரிகை படிப்பதாக, அதாவது சிங்கப்பூரில் அவர் இருந்த காலகட்டத்தில், இதை வாசித்த பொழுது எடுக்கப்பட்ட ஒளிப்படம் இது. இதனை நாம் பார்ப்போம்.
15 ஆம் தேதி, டிசம்பர் மாதம்
1929 இல் புறப்படுகிறார்!
1929 இல் புறப்படுகிறார்!
அடுத்ததாக நான் வெகுவிரைவாக உங்களுக்குச் சிலவற்றை விளக்கலாம் என்று நினைக்கின்றேன். அதாவது முதல் பயணம். மலாயவுக்கான இந்த முதல் பயணம் ஏற்பட்ட காலம் என்று பார்த்தோம் என்றால், 15ஆம் தேதி, டிசம்பர் மாதம் 1929 இல் அவர் புறப்படு கிறார்.
அங்கிருந்து பிறகு 16 ஆம் தேதி ஜனவரி மாதம், 1930 இல் அப்போது அவர், நாகப்பட்டினத்திற்கு அதாவது இந்தியாவிற்கு, தமிழ்நாட்டிற்குத் திரும்பி விடுகின்றார். இந்தக் காலகட்டத்தில் உள்ள விஷயங்களைப் பற்றிதான் நாம் பார்க்கப்
போகின்றோம்.
பினாங்குக்குக் கப்பல் வழியாகப்
பயணம் செல்கின்றார்!
பயணம் செல்கின்றார்!
இப்போது இங்கு பார்க்கும்போது மலாய் எல்லோ ருக்கும் தெரியும். இப்போது இருக்கிற எல்லோருக்கும் தெரியும். ஆனால், அந்த பயணத்தைப் பற்றி பார்க்கும்போது 1929 இல் நாகப்பட்டினத்தில் இருந்து அவர் பயணம். இந்தக் கோடு, நீங்கள் பார்க்கிறீர்கள் அல்லவா, கருப்பு நிறத்தில் இருக்கிறது அந்த கோடு. அங்கிருந்து அவர் பினாங்குக்குக் கப்பல் வழியாகப் பயணம் செல்கின்றார். இதுதான் நாகையிலிருந்து – பினாங்கு வரை அவர் செல்கின்ற பயணம். சுயமரியாதை இயக்கக் கருத்துகளைப் பற்றி, அவருடைய பயணத்திற்கு ஒரு நோக்கம் இருக்கும் இல்லையா, அது என்ன நோக்கம்? ஏன் அந்தப் பயணம் செல்லவேண்டும்? அவர் பயணம் செய்யும்போது அவருக்கு வயது 56. அந்த வயதில் நிறைய பேர் தமிழ் மக்களாகிய நாம் என்ன செய்வோம்? பெரும்பாலானோர் வீட்டில் அமைதியாக உட்கார்ந்து, இந்தக் காலகட்டம் என்றால், தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்போம். அல்லது அந்தக் காலகட்டத்தில், பத்திரிகை வாசித்துக் கொண்டு அமைதியாக இருப்போம். ஆனால், அந்த வயதில் 56 வயதில், அவர் பயணிக்கின்றார். சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி மலாய் நாட்டில் இருக்கின்ற தமிழ் மக்களிடம் போய் சொல்ல வேண்டும் என்பதுதான் அவருடைய முக்கியமான நோக்கமாகும். அதோடு அந்தக் காலகட்டத்தில், மலாயா, தென்னாப்பிரிக்கா, இலங்கைப் போன்ற பகுதிகளை எடுத்துக்கொண்டால், அங்கே நிறைய பேர், தமிழ் மக்கள், தமிழ்நாட்டில் இருந்து அங்கே போய் குடியேறி இருக்கிறார்கள். ஆக, அவர்களோடு சேர்ந்து பார்ப்பனியம் என்ற கொள்கையும் போயிருக்கிறது. அதைப் பற்றி அவர்களிடம் விளக்க வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கமாக இருக்கிறது.
உடல் உழைப்பால், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எல்லாம் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், கடவுள், வேதம், சாஸ்திரம், புராணம் என்கிற விஷயத்திற்காக அழுக்குப்படாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற பார்ப்பனர்கள், தமிழ்நாட்டில் இருந்து வருகின்ற பார்ப்பனர்களிடம் கொடுக்கின்றார்களே என்பதைப் பார்த்து, அவர்களுக்குச் சில தெளிவை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கமெல்லாம், அவருடைய பயணத்தின் முக்கிய நோக்கமாக இருக்கின்றது. ஆக இந்த நோக்கத்தோடு அவருடைய பயணம் அமைகின்றது.
(தொடரும்)
