விக்கிரவாண்டி சுயமரியாதைச் சுடரொளிகள் தண்டபாணி-சரோஜா ஆகியோரின் பெயரன் நெடுஞ்செழியன்-திவ்யபாரதி மணவிழாவை கழகத் தலைவர் ஆசிரியர் நடத்தி வைத்தார்

2 Min Read

‘சுயமரியாதைத் திருமணம்-தத்துவமும் வரலாறும்’ என்று நூலின்
அய்ந்து பிரதிகளைத் தமிழர் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.

விக்கிரவாண்டி. ஜூலை 10- விக்கிரவாண்டி முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் தண்டபாணி-சரோஜா ஆகியோ ரின் மகன் வழிப் பேரனும் ரவிச்சந்திரன்-செல்வகுமாரி ஆகியோரின் மகனுமான நெடுஞ் செழியனுக்கும், தஞ்சாவூர் மாவட்டம் நரசிங்கம்பேட்டை சிவ சுப்பிரமணியன்-பத்மா ஆகியோரின் மகள் திவ்யபார திக்கும் மணவிழாவை விழுப் புரம் ஆனந்த மகாலில் 9-7-2026 அன்று காலை 10:30 மணி அளவில் கழகத் தலைவர் ஆசிரி யர் அவர்கள் நடத்தி வைத்தார்.

முதலில் மணவிழாவிற்கு வருகை தந்த அனைவரையும் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் வரவேற்றார்.

மணமக்களை வாழ்த்தி திராவிட மாணவர் கழக இணைச் செயலாளர் நாகை இளமாறன், மாநில ஒருங் கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், நட்புறவு நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் துபாய் மூர்த்தி (அம்மாசத்திரம் ஒன்றிய கவுன்சிலர் (திமுக)), கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி வாழ்வியல் உரையாற்றி னர்.

கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மணமக்களை உறுதிமொழி ஏற்க வைத்து மணவிழாவை நடத்தி வைத்தார்.

ஆசிரியர் அவர்கள் உரையில்,  முரட்டு சுயமரியாதை இயக்க வீரர் சுயமரியாதைக்காரரான.  விக்கிரவாண்டி தண்டபாணி -சரோஜா ஆகியோரது குடும்ப மணவிழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்தக் குடும்பத்தினர் நல்ல கொள்கைத் தெளிவு மிக்கவர்.  இவர்கள் வீட்டில் நடைபெறும் ஆறாவது சுயமரியாதை திருமணத்தில் நான் கலந்து கொள்வதாக தெரிவித்தார்கள். இதோடு முடிந்து விடாது, இது தொடரும் என்றும் குறிப்பிட்டார்.  இந்த குடும்பத்தில் வேர்களும் சரி விழுதுகளும் சரி மிக சிறப்பாக வளர்ந்து இருக்கிறார்கள்.  நன்கு படித்திருக்கிறார்கள். தந்தை பெரியாரை பின்பற்றிய குடும்பத்தினர் எப்படி சிறப்பான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதற்கு இந்த குடும்பமும் எடுத்துக்காட்டான ஒன்று..

சுயமரியாதைத் திருமணத்தை மலேசிய அரசு அங்கீகரித்து அங்கு நமது பொறுப்பாளர்களை இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் அனுமதி அளித்துள்ளது.  சிங்கப்பூர் அரசும் உரிய அங்கீகாரம் அளித் துள்ளது.  ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நானும் சில திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறேன்.  தமிழ்நாடு முழுவதும் இந்தியா முழுவதும் சுயமரியாதைத் திருமணங்களை இளைஞர்கள் அதிகம் செய்து கொள்கிறார்கள் சிறப்பாக வாழ்கிறார்கள்.

அதன் நூற்றாண்டு விழாவை விரைவில் நாம் வெகு சிறப்பாக நடத்திட உள்ளோம்.  நமது பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையை சொல்லி வளர்க்க வேண்டும் நமது கல்வி நிறுவனங்களிலும் அதனைத் தான் நாங்கள் சொல்லிக் கொடுக்கிறோம்  மணமக்களுக்கு அறிவுரை எல்லாம் நான் எங்கும் சொல்வதில்லை.  அன்போடு பழகுங்கள்  வாழ்க்கையில் வெற்றி, தோல்விகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.  விட்டுக் கொடுத்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள். சிறப்பாக வாழ்க்கை அமையும் என்று மணமக்களை வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் விழுப் புரம் மாவட்டத் தலைவர் கோபண்ணா, விழுப்புரம் மாவட்டச் செயலாளர் அரங்கபரணிதரன், திண்டிவனம் மாவட்டத் தலைவர் அன் பழகன், திண்டிவனம் மாவட்ட செயலாளர் இளம்பரிதி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தம்பி பிரபாகரன், விஜயலட்சுமி தாஸ், ரமேஷ், பெருமாள், திமுக நகரப் பொறுப்பாளர் சக்கரை, துபாய் மூர்த்தி, செஞ்சி துரை திருநாவுக்கரசு உள்ளிட்ட விழுப்புரம், திண்டி வனம் மாவட்ட கழகத் தோழர் கள், பொறுப்பாளர்கள், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *