பெங்களூருவில் சூரிய கிரகண சுழற்சி உணவுப் பொருட்கள் உண்ணும் எழுச்சித் திருவிழா

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

பெங்களூரு, ஆக. 15- பெங்களூருவின் பிரமிப்பு மிகு டவுன் ஹால் முகப்பில் 12.8.2026 மாலை 7 மணி முதல் 10.30 மணி வரை சூரிய கிரகண பெயர்ச்சி மூடநம்பிக்கை ஒழிப்பு எழுச்சி உண்ணும் பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

டவுன் ஹால் படியின் முகப்பு முழுவதும் உண்ணும் பொருட்களான தர்பூசனிப்பழம், கிரன் பழங்கள், வாழைப் பழச் சீப்புகள், ஆப்பிள் பழங்கள், சாத்துக்குடி, ஆரஞ்சுப் பழங்கள், அன்னாசி பழங்கள், மாதுளம் பழங்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள், ஏராளமான பிரியாணி பாக்கெட்டுகள், இனிப்பு போளி, சமோசாக்கள், குடிநீர் பாட்டில்கள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.

மூத்த வழக்குரைஞரும், சமூக ஆர்வலருமான தி.நரசிம்மமூர்த்தி, கருநாடக மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சே.குண வேந்தன் ஆகியோரின் சீரிய முயற்சியால் இவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. படிகளின் இரு பக்கங்களும் ஏராளமான கழகத் தோழர்களும் தமிழ் அமைப்பினரும், பல்வேறு சமூக அமைப்பினரும், மகளிரும் அமர்ந்திருந்தனர். தமிழ், கன்னடம், ஆங்கிலம், மலையாள மொழிப் பதாகைகள் ஏந்தி, மூடநம்பிக்கை எதிர்ப்பு ஒலி முழக்கங்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர். இடை டையே ஒலி பெருக்கி மூலம் மூடநம்பிக்கை எதிர்ப்பு உரையாடலும், இனிமையான பாடல்களும பாடி மகிழ் வூட்டினர். பல்வேறு தொலைக் காட்சி நிறுவனங்கள் நேர்காணல் நடத்தினர். திராவிடர் கழகத்தின் சார்பில் செயலாளர் இரா.முல்லைக்கோ கருத்துரை வழங்கினார்.

பெங்களூரு வடஹரிஹல்லி கிராமத்தில் மாநிலத் தலைவர் ஜார்ஜ் தலைமையில் முதியோர், மூத்த மகளிர், மாணவர்கள், மழலைகள் விடுதியில் இருந்து மாணவியர், சிறார்கள் கருப்பு உடை அணிந்து நடத்தியது. பறையிசை நிகழ்ச்சி சுமார் ஒரு மணி நேரம் ஆட்டம் பாட்டத்துடன் முழக்கம் இட்டனர். பொது மக்களிடையே பெரும் மகிழ்வினை ஏற்படுத்தி யது.

மூடநம்பிக்கை ஒழிப்பு குறித்து பல்வேறு அமைப்பினரும், இயக்கத்தினரும், சமூக ஆர் வலர்களும் கருத்துரை வழங்கினர்.

அனைவருக்கும் காட்சிப் படுத்தப்பட்ட பழங்களும், உணவுப் பொருட்களும், பிஸ்கட்டுகளும் வழங்கப்பட்டன. உணவுப் பொருட்கள் உண்ணக் கூடா நேரத்திலும் அனைவரும் படிக்கட்டுகளில் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர். எலுமிச்சை சோறும் அனை வருக்கும் வழங்கப்பட்டது. ஏராளமான பொது மக்களும் உணவுப் பொருட்களை அருந்தி மகிழ்ந்தனர். சுமார் முக்கால் மணி நேரம் உணவு அருந்தும் நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

கருநாடக மாநில திராவிடர் கழகத் துணைத் தலைவர் ஜெ.அருண், செயலாளர் இரா.முல்லைக்கோ, பொதுக்குழு உறுப்பினர் இரா.இராசாராம், அனந்தபுரம் பகுதி தலைவர் குணசேகரன், டேவிட் மற்றும் ஏராளமான கழகத் தோழர்களும், பண்பாளன், பார்த்தசாரதி மற்றும் கழகத் தோழர்களும் கன்னட ரச்சன வேதிக்கே அமைப்பு தலைவர் நாகேஷ், எழுத்தாளர் அனுமகவுடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்விற்கு தி.நரசிம்மமூர்த்தி, சே.குணவேந்தன் ஏற்பாடுகள் செய்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *