சுதந்திர நாளா? கொல்கத்தாவில் எதிர்கட்சி பெண் மக்களவை உறுப்பினருக்கு நள்ளிரவில் பாஜக குண்டர்கள் மிரட்டல்

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

கொல்கத்தா, ஆக. 15- சுதந்திர நாளிற்கு முந்தைய நாள் இரவில், மேற்கு வங்கத்தின் கிருஷ்ணநகரில் உள்ள அரசு சர்க்யூட் ஹவுஸில் தங்கியிருந்த திரிணாமுள் காங்கிரஸ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா நள்ளிரவில் உடனடியாக அறையைக் காலி செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்ட நிலையில் வெளியே பாஜக குண்டர்கள் ஆயூதங்களுடன் நின்று மிரட்டல் விடுத்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள கிருஷ்ணகஞ்ச் சர்க்யூட் ஹவுஸில்  மக்களவை உறுப்பினர் மஹுவா மெய்த்ரா தங்கியிருந்த வேளையில், அதன் வாசலுக்கு வெளியே திரண்ட பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தொண்டர்கள் “ஜெய் சிறீ ராம்” என முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சூழல் பரபரப்பாக இருந்த நிலையில், மாவட்ட நிர் வாகத்தின் தரப்பிலிருந்து இரவு 9:47 மணிக்கும், அதைத் தொடர்ந்து 10:52 மணிக்கும் அறையை காலி செய்யுமாறு தொடர்ச்சியாக அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் வந்துள்ளன.

இந்த நிகழ்வு குறித்து மக்களவை உறுப்பினர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என்னைத் தோட்டாக்களைச் சந்திக்க நான் தயார்; ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். இந்தியாவில் ஒரு பெண் மக்களவை உறுப்பினருக்கே இந்த நிலைமைதான். சுதந்திர தின நாளில் இந்தியாவின் ஜனநாயகம் இருக்கும் நிலைக்கு இதுவே சான்று” என்று மிக உருக்கமாகவும் ஆவேசமாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகக் கேள்விகளும் அய்பியு-வுக்கு கோரிக்கையும்

மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு பெண் மக்கள் பிரதிநிதிக்கே நள்ளிரவில் பாதுகாப்பு அச்சம் ஏற்படும் சூழல் உருவாகியிருப்பது, நாட்டின் ஜனநாயக அமைப் புகள் மற்றும் மக்கள் பிரதிநிதி களின் பாதுகாப்பு மீது கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிகாரம் மற்றும் கும்பல் அரசியலின் மூலமாக அச்சுறுத்தல் தூண் டப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளின் கண்ணியமும் பாதுகாப்பும் எந்தவொரு தனிப்பட்ட கட்சி யின் சொத்தும் அல்ல என்பதால், நாடாளுமன்றங்களுக்கு இடையிலான பன்னாட்டு அமைப்பான  அய் பி யு இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருவதால், மக்களவை உறுப்பினர் மஹுவா மொத்ரா கொல்கத்தா காவல் நிலையத்திற்கு அழைப்பு விடுத்த போது சரியான முறையில் பதில் அளிக்காமல் காவல்துறையும் மவுனம் காக்கவே சுதந்திர நாள் அன்று நள்ளிரவில் பெண் மக்களவை உறுப்பினருக்கே பாதுகாப்பில்லா சூழல் நிலவுவதாக கவலை தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *