கபிஸ்தலத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

கபிஸ்தலம், மே 4- கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், கபிஸ்தலம் மணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பழைய வளாகத்தில் புரட்சி கவிஞர் 136ஆவது பிறந்தநாள் மற்றும் தொழிலாளர் நாள் விழா 1.5.2026 வெள்ளி மாலை 6:30 மணிக்கு நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு. சேகர் தலைமை ஏற்று நடத்தினார்.
மாவட்ட பகுத்தறிவாளக் கழகச் செயலாளர் பேரா. ம .சேதுராமன் வருகை தந்த அனைவரையும் வரவேற்று பேசினார் .
கூட்டத்திற்கு மாவட்ட கழகத் தலைவர் கு.நிம்மதி, மாவட்ட கழகச் செயலாளர் சு.துரைராஜ், கழக ஒன்றிய தலைவர் தங்க.பூவானந்தம், ஒன்றிய கழக செயலாளர் சு .கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடக்கத்தில் தொழிலாளர் நாள் குறித்த ஒரு சிறப்பான உரையை தஞ்சை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மேனாள் துணைச் செயலாளர் தோழர் பரமசிவம் உணர்ச்சிப் பொங்க உரையாற்றினார்.
அவருக்கு ஒன்றிய கழக தலைவர் தங்க. பூவானந்தம் சிறப்பு செய்தார்கள்.
தொடர்ந்து ‘அறிவை விரிவு செய்’ என்னும் பொருளில் நன்னிலம் அரசு கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் கை .அறிவழகன் சிறப்பானதொரு உரையை பாரதிதாசனில் தொடங்கி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வழியாக கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ, சேகுவாரா வரை சென்று மீண்டும் பெரியாரிடம் திருப்பி கொண்டு வந்து தன்னுடைய உரையை நிறைவு செய்தார் .
அவருக்கு ஒன்றிய கழக செயலாளர் சு.கலியமூர்த்தி பயனடையும் ,மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் திருநாகேஸ்வரம் திரிபுரசுந்தரி ஆசிரியரின் ‘வாழ்வியல் சிந்தனைகள்’ நூலினையும் அளித்து சிறப்பு செய்தனர்.
முன்னதாக பொதுவுடமை இயக்கம் போராளி பரமசிவத்தையும், சிறப்புரையாற்றிய பேராசிரியர் கை. அறிவழகனையும் மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வி.மோகன் அவைக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.
தொடர்ந்து கூட்டத்திற்கு முதலாவதாக வருகை புரிந்த தமிழ்நாடு அரசின் முதுபெரும் தமிழ் ஆர்வலர் கோடையிடி குருசாமிக்கு சிந்தனைக் களத்தின் தொடர் வருகையாளர் உம்பளாபாடி கிருபாகரன் நூலினை வழங்கிச் சிறப்பித்தார்கள்.
தொடர் வருகையாளர் வரிசையில் பாவை பைந்தமிழ் பேரவையினுடைய செயலாளர் கமலஹாசனுக்கு ஸ்டேட் வங்கியின் மேனாள் அலுவலர் கபிஸ்தலம் ஆறுமுகமும், பெரியார் திராவிடர் சமுதாய நல கல்வி அறக்கட்டளை உறுப்பினர் பி .ராஜேந்திரனுக்கு மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் வே.துரைசாமியும், கும்பகோணம் வைரமுத்து இலக்கியப் பேரவையினுடைய பொறுப்பாளர் ஆடலரசனுக்கு பாபநாசம் முனைவர் சோ.பாலகிருஷ்ணனும், கபிஸ்தலம் தொழிலதிபர் குணசேகரனும் மாவட்டச் செயலாளர் சு. துரைராஜும் துரையரசனுக்கு அவர்களுக்கு மாவட்ட தலைவர் கு.நிம்மதியும் நூலினை வழங்கி சிறப்பித்தார்கள்.
தொடர்ந்து மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் திருஞானசம்பந்தம் நன்றியுரை கூறிட கூட்டம் 8.00 மணிக்கு சரியாக நிறைவுற்றது.
இந்நிகழ்வுகள் அனைத்தையும் மாவட்ட திராவிடர் கழக தொழிலாளர் அணி பொறுப்பாளர் தலைவர் பெரியார் கண்ணன் ஒருங்கிணைத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *