புதுடில்லி, ஆக. 12- “சிறுபான் மையினரைச் சேர்ந்த எத்தனை பேர் உயர்நீதிமன்ற உச்ச நீதிமன்றங்களில் நீதிபதிகளாக உள்ளனர்?” என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் கழக உறுப்பினர் கவிஞர் சல்மா கேள்வி எழுப்பினார்.
இது குறித்து மாநிலங்களவை யில் அவர் எழுப்பிய கேள்வி வருமாறு:
Christians muslims 266LL minority community Co. தற்போதைய உயர்நீதி மன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதி களின் விவரங்கள்; கடந்த 40 ஆண்டுகளில், ஒவ்வொரு 10 ஆண்டுகள் அடிப்படையில் minority communities சேர்ந்த நீதிபதிகளின் விவரங்கள்; மற்றும் இந்தியாவின் பல்வேறு சதவீத உயர்நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் பாலின மற்றும் மத அடிப்படையிலான Diversi மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
இதற்கு ஒன்றிய அமைச்சர் அளித்த பதில் வருமாறு:
இந்திய உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங் களுக்கு நீதிபதிகள் நியம னம் இந்திய அரசியல மைப்புச் சட்டத்தின் 124, 217 மற்றும் 224 ஆகிய பிரிவுகளின் கீழ் மேற் கொள்ளப்படுகிறது.
இப்பிரிவுகளில் எந்த வொரு ஜாதி அல்லது சமூகப் பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான விதிகள் இடம்பெறவில்லை. எனவே, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளில் எந்தவொரு ஜாதி அல்லது சமூகப் பிரிவினரின் பிரதி நிதித்துவம் தொடர்பான வகுப்பு வாரியான தரவுகள் மத்திய அளவில் கிடைக்கவில்லை.
நியமன நடைமுறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (Memoran dum of Procedure MoP) படி, உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கான பரிந் துரைகளைத் தொடங்கும் பொறுப்பு இந்திய தலைமை நீதிபதியிடம் (Chief Justice of India) உள்ளது. அதேபோல், உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கான பரிந் துரை களைத் தொடங்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் உள்ளது.
எனினும், நீதித்துறை யில் சமூகப் பன்முகத்தன்மையை (Social Diversity) மேம்படுத்துவதில் அரசு உறுதிபூண்டுள்ளது. இதன் அடிப்படையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கான பரிந்துரைகளை அனுப்பும்போது, பட்டியலினத்தவர் (Scheduled Castes SC), பழங்குடியினர் (Scheduled Tribes – ST), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Other Backward Classes OBC), சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் ஆகிய சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த தகுதியான நபர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்குமாறு உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளி டம் அரசு தொடர்ந்து கோரி க்கை விடுத்து வருகிறது. இதன் நோக்கம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகப் பன்முகத்தன்மையை உறுதி செய்வதா கும்.
உச்சநீதிமன்ற கொலீஜியத்தால் (Supreme Court Collegium) பரிந்துரைக்கப்படும் நபர்கள் மட்டுமே உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதி களாக நியமிக்கப்படு கின்றனர்.
இவ்வாறு ஒன்றிய அமைச்சர் பதிலளித்தார்.
