தேர்தல் ஆணையம் ஒரு நேர்மையற்ற அமைப்பாக உள்ளது! மோசடிகள் மூலமே பா.ஜ.க. தேர்தல்களில் வெற்றி பெற்று வருகிறது! பீகார் முன்னாள் முதலமைச்சர் தேஜஸ்வி குற்றச்சாட்டு!

1 Min Read

பீகார், மே 8– தேஜஸ்வி வெளி யிட்டுள்ள சமூகவலை தளப் பதிவில், அரசு நிர்வாகத்தின் அனைத்து அமைப்புகளும், நிறு வனங்களும் பாஜக-வின் கைகளில் உள்ளதாகவும், மோசடிகள் மூலமே பா.ஜ.க. தேர்தல்களில் வெற்றி பெறு கிறது என்றும், தேர்தல் ஆணையம் ஒரு நேர்மையற்ற அமைப்பாக உள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு எதிராகப் போராடு வதைத் தொடர்வோம் என்றும், இனி வரும் காலங்களிலும் பா.ஜ.க.வின் அனைத்து மோசடிகள் மற்றும் சதித்திட்டங்கள் அனைத்தும் அம்பலப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பீகார் கடந்த ஆறு மாதங்களில் இரண்டு முதலமைச்சர்களைக் கண்டுள்ளதாகவும், முதல் ஆண்டு பதவிக்காலத்தின் 50 சதவீதம் ஏற்கெனவே வீணாகிவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

பீகார் அரசின் கருவூலம் காலியாக உள்ளதை மறைத்து, உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் வகையில், என்கவுண்டர்கள், குடியிருப்புகளை இடிப்பது உள்ளிட்ட புல்டோசர் நட வடிக்கைகள் போன்ற நாடகங்களை அரசு தொடர்ந்து அரங்கேற்றி வருவதாகவும் தேஜஸ்வி குற்றம்சாட்டி உள்ளார்.

அரசு நிர்வாகத்தின் அனைத்து அமைப்புகளும், நிறுவனங்களும் பா.ஜ.க.-வின் கைகளில் உள்ளன மோசடிகள் மூலமே பா.ஜ.க. தேர்தல்க ளில் வெற்றி பெறுகிறது

தேர்தல் ஆணையம் ஒரு நேர்மை யற்ற அமைப்பாக உள்ளது பாஜக-ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு எதிராகப் போராடுவதைத் தொடர்வோம் இனி வரும் காலங்களிலும் பா.ஜ.க.-வின் அனைத்து மோசடிகள், சதித்திட்டங்கள் அனைத்தையும் அம்பலப்படுத்துவோம் பீகார் கடந்த 6 மாதங்களில் 2 முதலமைச்சர்களைக் கண்டுள்ளது முதல் ஆண்டு பதவிக்காலத்தின் 50% ஏற்கெனவே வீணாகிவிட்டது

பீகார் அரசின் கருவூலம் காலியாக உள்ளதை மறைத்து,உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் என்கவுண் டர்கள், குடியிருப்புகளை இடிப்பது உள்ளிட்ட புல்டோசர் நடவடிக்கை கள் போன்ற நாடகங்களை பீகார் அரசு தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *